வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம்- அதிமுக தலைவர்கள் மோதல் குறித்து ப. சிதம்பரம் கேள்வி
சென்னை: வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் மோதிக் கொள்வது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5%; சீர் மரபினருக்கு 7%; இதர ஜாதியினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு என்பது தமிழக அரசின் அறிவிப்பு. இதற்கு தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் வன்னியர் உள்ஒதுக்கீடு தற்காலிகமானதே என துணை முதல்வர் ஓ. பன்னீசெல்வம் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் வடதமிழக அமைச்சர்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை! இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு!
10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை!
— P. Chidambaram (@PChidambaram_IN) March 31, 2021
இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு!
முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்?
எல்லாவற்றுக்கும் மேலாக 'ஒதுக்கீடு' என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?
இவ்வாறு ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.