சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்மா சேஷாத்ரி "கீதா".. 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை.. போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி.. பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகள் தொடர்பாக தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றன. அதிலும் போலீசார் நடத்திய இரண்டு நாள் விசாரணையிலேயே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.

பல பிரபலங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி.. உயர்தர பள்ளி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியில் அரங்கேறிய பாலியல் கொடுமைகள் தமிழகத்தை உலுக்கி உள்ளது. அதிலும் அங்கு பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகளிடம் இவர் தவறாக பேசியது, உடலை தொடும் ரீதியில் பேசியது, தவறாக மெசேஜ் அனுப்பியது, அரை நிர்வாணமாக ஆன்லைன் கிளாசுக்கு வந்தது என்று பல புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

ராஜகோபாலன்

ராஜகோபாலன்

ராஜகோபாலன் ஒரு பக்கம் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளரிடமும் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

 விசாரணை

விசாரணை

அந்த வகையில் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதாவிடம் 2வது நாளாக விசாரணை இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நேற்று கீதாவிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அதை தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

கீதா

கீதா

இதில் கீதாவிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள். முக்கியமாக ராஜகோபாலனுக்கு எதிராக மாணவிகள் புகார் கொடுத்தும் அதில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

பதில் இல்லை

பதில் இல்லை

அவரை ஏன் தொடர்ந்து பாடம் நடத்த அனுமதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு கீதா சரியாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் ராஜகோபாலன் தனது வாக்குமூலத்தில் பள்ளியில் மேலும் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக கூறி இருந்தார். இவர்களை பற்றி கீதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

யார்?

யார்?

அதாவது பத்மா சேஷாத்ரி பள்ளியில் வேறு யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு கீதா பதில் அளிக்கவில்லை. வேறு யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள்.

ஆதாரம்

ஆதாரம்

ஒரு பக்கம் ராஜகோபாலனுக்கு எதிராக 30 மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது போக இன்னும் பலரை புகார் செய்ய முன்வரும்படி போலீஸ் கூறி வருகிறது. புகார் அளித்த மாணவிகள் மூலம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதால் இன்னும் பலர் இதில் சிக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

English summary
Padma Seshadri School Sexual Harassment: Police investigate School head Geetha for the second day after yesterday long investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X