அனைத்து கட்சியிலும் ரவுண்டடித்து கடைசியில் ம.நீ.ம.வில் ஒதுங்கிய பழ.கருப்பையா தி.நகரில் போட்டி!
சென்னை: பல்வேறு கட்சிகளுக்கு மாறி, மாறிச் சென்று கடைசியில் மக்கள் நீதி மய்யம் பக்கம் ஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா தி. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழ. கருப்பையா காங்கிரஸ், மதிமுக, திமுக, அதிமுக என்று தமிழத்தில் உள்ள அனைத்து கட்சியிலும் ஒரு ரவுண்ட் வந்தார்
நடிகர் விஜய் நடித்த சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடும் விமர்சனங்களை தாண்டி பழ.கருப்பையா தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2-வது கட்ட வேட்பாளர் பட்டியல்
தமிழக தேர்தல் களம் அதிவேகமாக சென்று வருகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்போது கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பழ.கருப்பையா போட்டி
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு கட்சிகளுக்கு மாறி, மாறிச் சென்று கடைசியில் மக்கள் நீதி மய்யம் பக்கம் ஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா தி. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சியிலும் ரவுண்ட் வந்தார்
காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்டு முதன்முதலாக காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கினார் பழ. கருப்பையா.அதன்பின்பு அவர் காங்கிரஸ், மதிமுக, திமுக, அதிமுக என்று தமிழத்தில் உள்ள அனைத்து கட்சியிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.2011 சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பழ.கருப்பையா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெறுவாரா?
அதன்பின்னர் அதிமுக அரசை விமர்சித்ததால் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்ட்டார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்தார். கடைசியில் திமுகவில் இருந்த அவர் 2019-ல் அதில் இருந்து விலகினார். கடைசியில் சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் தஞ்சமடைந்தார். பழ. கருப்பையா.நடிகர் விஜய் நடித்த சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடும் விமர்சனங்களை தாண்டி பழ.கருப்பையா தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications