சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரடியாக மிரட்டிட்டாரு.. ஆபத்து! மன்னார்குடி ஜீயருக்கு சொந்த மண்ணிலேயே செக்.. களத்தில் குதித்த திமுக

Google Oneindia Tamil News

சென்னை: மன்னார்குடி ஜீயருக்கு எதிராக திமுக, திக சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் எதிர்த்துள்ளன.

இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதில், பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இதை யாராலும் தடுக்க முடியாது.

நடமாட முடியாது.. சீறிய மன்னார்குடி ஜீயர்.. மடாதிபதியின் அதிகாரமே மகாபெரியது.. விட்டு விளாசிய திருமா! நடமாட முடியாது.. சீறிய மன்னார்குடி ஜீயர்.. மடாதிபதியின் அதிகாரமே மகாபெரியது.. விட்டு விளாசிய திருமா!

தடுத்து பாருங்கள்

தடுத்து பாருங்கள்

எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது. முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தை தடுத்து பாருங்கள். யாராலும் முடியாது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.. கடுமையான எச்சரிக்கை விடுகிறேன், என்று கூறி இருந்தார்.

பரபரப்பு

பரபரப்பு

இவர் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை இப்படி நேரடியாக மிரட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2020ல் இதேபோல் தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரம் சர்ச்சையானது. அப்போது ஆதீனம் பல்லக்கில் செல்லவில்லை. அப்போது மன்னார்குடி ஜீயர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் அவர் அமைச்சர்களுக்கு எதிராக பேசி உள்ளார். இதைத்தான் திமுகவினர் தீவிரமாக எதிர்த்துள்ளனர்.

ஜீயர் மன்னார்குடி

ஜீயர் மன்னார்குடி

மக்கள் வாக்களித்து, எம்எல்ஏ ஆகி, அமைச்சர்களாக இருக்கும் நிர்வாகிகளுக்கு எதிராக எப்படி ஒரு ஜீயர் பேசலாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது. அவரை உடனே கைது செய்யுங்கள் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு. திமுகவினர் பலர் இணையத்தில் இது தொடர்பாக முதல்வரை டேக் செய்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் கைது, விசாரணையோ, போலீசில் யாராவது புகார் அழுத்தத்தால்தான் சிக்கல் இன்றி செய்ய முடியும்.

Recommended Video

    கொதித்தெழுந்த Mannargudi Jeeyar | Pattina Pravesam Issue | Dharmapuram Adheenam | Oneindia Tamil
    புகார்

    புகார்

    ஆனால் யாரும் ஜீயருக்கு எதிராக புகார் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில்தான் மன்னார்குடி ஜீயருக்கு எதிராக அவரின் சொந்த ஊரான மன்னார்குடியிலே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது என்று பேசிய மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வேண்டும் என்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. திமுக சார்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     கைதா?

    கைதா?

    திகவினரும் திமுகவினருடன் சேர்ந்து சென்று இன்னொரு புகாரை வழங்கி உள்ளனர். இந்த புகார்களில் அமைச்சர்களுக்கு பகிரங்கமாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ஒழுங்கிற்கு ஆபத்து. அவரை உடனடியாக கைது செய்து , சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திமுகவின் இந்த புகாரால் போலீசார் ஜீயரை கைது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Pallakku Row: DMK give police complaint against Mannargudi Jeeyar's for his controversial statements against Ministers. தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் எதிர்த்துள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X