பஞ்சமி நிலங்களை கண்டறிய புதிய ஆணையம்.. அந்த 12 லட்சம் ஏக்கர் எங்கே? வன்னி அரசு உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை கண்டறிய விரைவில் புதிய ஆணையம் அமைக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் தற்போது 1.86 லட்சம் ஏக்கர் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நிலங்களை கண்டறிந்து, நிபந்தனை மீறல்கள் இருந்தால் மீட்கும் நடவடிக்கைக்கு இது புதிய வாய்ப்பாக அமையும் என்றே நம்பப்படுகிறது.

பஞ்சமி நிலம் என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலமற்ற Depressed Classes / பட்டியலின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நிபந்தனைகளுடன் ஒதுக்கப்பட்ட நிலங்களை பொதுவாகக் குறிக்கும். தமிழ்நாட்டில் இத்தகைய நிலங்கள் DC Land (Depressed Classes Land) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Panchami Land New Commission

பஞ்சமி நிலம் என்றால் என்ன

இந்த நிலங்களுக்கு ஒதுக்கீட்டின்போது குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் நிலத்தை விற்பனை செய்யவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாது. அதன்பிறகும், அசல் ஒதுக்கீட்டு நிபந்தனைகளின்படி பிற சமூகத்தினருக்கு மாற்ற, கட்டுப்பாடு உண்டு.

அத்தகைய நிபந்தனைகளை மீறி நிலம் மாற்றப்பட்டிருந்தால், அரசு அந்த அசைன்மெண்ட்டை ரத்து செய்து நிலத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரத்தில், ஒரு நிலம் பஞ்சமி நிலமா என்பதை வெறும் பட்டாவை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.. அசல் ஒதுக்கீட்டு ஆவணங்கள், வருவாய்த்துறை பதிவுகள் மற்றும் நிலத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் போன்றவற்றையும் சரிபார்க்க வேண்டும்.

இந்நிலையில், தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை கண்டறிய விரைவில் புதிய ஆணையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு தந்த பதில்

தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளனவா? தற்போது அதன் நிலை என்ன என்பது தொடர்பாக, சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாரிமுத்து நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, "1891ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில், தமிழகத்தில் ஆதி திராவிடர்களுக்காக, 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை, வேறு சமூகத்தினர் யாரும் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

ஆதி திராவிடர்கள் என்று சொல்லப்படும் தலைப்பில் வரும் 76 சமூகத்துக்கும், பஞ்சமி நிலம் உரிமையானது. ஆனால், காலப்போக்கில் இந்த நிலங்கள் படிப்படியாக குறைந்தன. இது குறித்த உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக, கடந்த 1991ல் அதிமுக ஆட்சியில், அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

குழு அமைக்கப்படும்

அதற்குபிறகு, 2011 அதிமுக ஆட்சியில், நீதிபதி மருதமுத்து தலைமையில் பஞ்சமி நிலம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டது... பிறகு 2015ம் ஆண்டு ஹைகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கை அடிப்படையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், இப்போது வெறும் 1.86 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதியுள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிய, அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக விரைவில் புதிய ஆணையமும் அமைக்கப்பட உள்ளது" என்று வன்னி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூப்பரான அறிவிப்பு

பஞ்சமி நிலங்களை கண்டறிய தமிழக அரசு புதிய ஆணையம் அமைக்க உள்ளதாக அறிவித்திருப்பது, பஞ்சமி நில விவகாரத்தில் முக்கியமான முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இப்போதுள்ள பஞ்சமி நிலங்களின் உண்மையான நிலவரத்தை கண்டறிவதுடன், காலப்போக்கில் பிறருக்கு நிபந்தனை மீறி மாற்றப்பட்டதாக சொல்லப்படும் நிலங்களையும் ஆவணங்கள் அடிப்படையில் அடையாளம் காண வாய்ப்பு ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல், உரிய விசாரணைக்கு பிறகு நிபந்தனை மீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலங்களை மீட்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் இந்த புதிய ஆணையம் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கலாம் என்றே நம்பப்படுகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+