’மறவர்’ பரம்பரை ஜெ.வாரிசு ஓபிஎஸ்.. 3 காரணம் சொல்றேன்! மா.செ. மீட்டிங்கில் கிளாஸ் எடுத்த பண்ருட்டி!
சென்னை : தொண்டர்கள்தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர் , எனவே தொண்டர்கள்தான் தலைமையை அங்கீகரிப்பார்கள் எனவும், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் என அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அந்தக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிகளை வகித்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இரு தரப்பினரும் எலியும் பூனையுமாய் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் தொண்டர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்போது இரு அணிகளுமே கட்சிக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் அது நிலுவையில் இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார் ஓபிஎஸ். இதனையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளராக அறிவிப்பது போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் என அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,"3 காரணத்தால் பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன். ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் , தான் செல்ல முடியாத இடங்களுக்கு , தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு , டெல்லி போன்ற இடங்களுக்கும் பன்னீர்செல்வத்தைத்தான் அனுப்புவார்.

துணிவு
அரசியல்வதிக்கு நம்பகத்தன்மை அவசியம். பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நம்பியது போல் மக்கள் நம்பலாம். இயக்கத்தை வழிநடத்த ஒருவருக்கு அடக்கம் பணிவு துணிவு இருக்க வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.. ' பணியுமாம் என்றும் பெருமை... என்கிறார் வள்ளுவர். பன்னீர்செல்வத்திடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை.

அரசியல் வாரிசு
எம்ஜிஆருக்கு எதிராக திமுகவில் பொதுக்குழு நடந்தபோது , திரைத்துறையில் இருக்கும் நிலையில் எம்ஜிஆர் முகத்தில் திராவகங்களை வீசி விடுவார்கள் என்று நாங்கள் கூறியதால் எம்ஜிஅர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. என்ன இருந்தாலும் மறவர் பரம்பரை ஓ.பன்னீர் செல்வம் . ஏழைகளுக்கான கட்சி இது. அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் தங்களை அதிமுக என்று சொல்லுவர். தொண்டர்கள்தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர் , எனவே தொண்டர்கள்தான் தலைமையை அங்கீகரிப்பார்கள்" என்றார். இதனை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications