சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

25ம் தேதி அரிய நிகழ்வு "பகுதி சூரிய கிரகணம்".. இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும்? எப்படி பார்க்கலாம்?

Google Oneindia Tamil News

சென்னை : வரும் அக்டோபர் 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த அரிய வான நிகழ்வை எப்படி பார்ப்பது என்பது பற்றி அறிவியலாளர்கள் விளக்கியுள்ளனர்.

அக்டோபர் 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்நிகழ்வின் போது சந்திரனின் ஒரு பகுதி மட்டும் சூரியனை மறைப்பதால் பகுதி நேர சூரிய கிரகணம் எனப்படுகிறது.

சூரியனை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கிரகணத்தின் போது சூரியனை பார்க்க, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சை தடுக்கக்கூடிய சிறப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதத்தில் நிகழும் சூரிய,சந்திர கிரகணங்கள்..4 கிரக கூட்டணியால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும் ஐப்பசி மாதத்தில் நிகழும் சூரிய,சந்திர கிரகணங்கள்..4 கிரக கூட்டணியால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. வரும் அக்டோபர் 25ஆம் தேதி ஏற்பட இருக்கும் சூரிய கிரகணமானது, பகுதி சூரிய கிரகணம் (partial solar eclipse) என அழைக்கப்படுகிறது. அதாவது, பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கும் நிகழ்வையே பகுதி சூரிய கிரகணம் என்கிறோம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து இந்த ஆண்டு பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.

பகுதி சூரிய கிரகணம்

பகுதி சூரிய கிரகணம்

பகுதி சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த பகுதி சூரிய கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து பார்க்கும்போது தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 04:29 மணிக்கு தொடங்கி மாலை 5:57 மணிக்கு உச்சம் பெறும்.

 இந்தியாவில் எந்த நேரம்

இந்தியாவில் எந்த நேரம்

இந்தியாவைப் பொறுத்தவரை பகுதி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி, மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழும். கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும். சென்னையில் கிரகணம் 31 நிமிடங்களும், கொல்கத்தாவில் கிரகணம் 12 நிமிடங்களும் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு எவ்வளவு நேரம்?

எங்கு எவ்வளவு நேரம்?

இந்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எவ்வளவு நேரம் தெரியும்? குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், ஜெய்ப்பூரில் 1 மணிநேரம் 18 நிமிடங்களும், டெல்லியில் 1 மணிநேரம் 12 நிமிடங்களும் நீடிக்கும். தமிழகத்தின் சென்னையில் 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும். கொல்கத்தாவில் 11 நிமிடங்கள் நீடிக்கும்.

வெறும் கண்களால் பார்க்கலாமா?

வெறும் கண்களால் பார்க்கலாமா?

எந்த சூரிய கிரகணத்தையும் நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பது நம் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில விநாடிகள் தான்

சில விநாடிகள் தான்

சூரியனின் புற ஊதா கதிர்வீச்சைத் தடுக்கக்கூடிய ஃபில்டர்கள் கொண்ட சிறப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். அதுவும், சில விநாடிகள் மட்டுமே பார்க்க வேண்டும். சூரிய கிரகணத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால், அதற்குரிய கண்ணாடி இருந்தாலும், நீண்ட நேரம் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

English summary
Partial solar eclipse will occur on October 25. Scientists have explained how to watch this rare celestial event. Since looking directly at the sun can harm the eyes, scientists recommend using solar glasses or binoculars to view solar eclipse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X