பாகப்பிரிவினை.. நில வழிகாட்டி மதிப்பு 70% உயர்வு? பத்திரப்பதிவு கட்டணம் எகிறுமே? பதிவுத்துறை முடிவு?
சென்னை: தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 70 சதவீதம் வரை உயர்த்தும் பணியை பதிவுத்துறை முடுக்கி விட்டுள்ள நிலையில், அதுகுறித்து பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் கடந்த 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்டன. ஆனால், இதில் சில குளறுபடிகள் காணப்பட்டதால், பத்திரப்பதிவு பணிகள் முடங்கும் சூழலுக்கு சென்றன.. இதற்கு பிறகு 2017ல், வழிகாட்டி மதிப்புகளில், ஒரேயடியாக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவை விட்டுவிட்டு, கடந்த 2012ல் இருந்த வழிகாட்டி மதிப்புகளையே மறுபடியும் அமல்படுத்த போவதாக பதிவுத்துறை கடந்த 2023ம் வருடம் அறிவித்தது.. இதனால், பல்வேறு தரப்பினரும் கோர்ட்டிற்கு சென்று வழக்கு தொடர்ந்தார்கள்... இதை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டும், கடந்த 2023ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.
மதிப்பு நிர்ணயம்: இதனால், 2017ல் அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளையே, கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழல் பதிவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், நில வழிகாட்டி மதிப்புகளை தற்காலிக ஏற்பாடாக மாற்றி அமைக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம வாரியாக தெருக்களின் விபரம் திரட்டப்பட்டு, அதற்கான மதிப்பு நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..
எப்படியும், 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளுக்கு பதிலாக, 2017ல் குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப்பட போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
கருத்து கேட்பு கூட்டம்: அதன்படி, கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீடு கட்டணத்தை 3 மடங்கு அரசு திடுதிப்பென்று உயர்த்திவிட்டது... இப்போது மேலும் 70 சதவீதம் உயர்த்தும் முடிவிலும் உள்ளதாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை பதிவுத்துறை நடத்தி வருகிறது. அதாவது, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றதாம்.
எனினும், 70 சதவீதம் வழிகாட்டு மதிப்புகளை உயர்த்தினால், கிராம மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.. தெரிவித்துள்ளனர்.. குறிப்பாக, கிராமங்களில் விவசாயம் செய்வோர், சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு ஆவணம் செய்ய மற்றும் பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்றால், இப்போதைய வழிகாட்டி மதிப்பீட்டுப்படி அதிக செலவாகிறது.
கோரிக்கை: அப்படியிருக்கும்போது, வழிகாட்டி மதிப்பை மேலும் உயர்த்தினால், கிராமப்புற மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக, நன்கொடையோ, உயில் சாசனமோ செய்ய பெரிய சிரமம் ஏற்பட்டுவிடும் என்தபால், வழிகாட்டி மதிப்பை உயர்த்து வதை மறுபரிசீலனை செய்து, பழைய நிலையே பதிவுத்துறை தொடர செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications