Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார் - ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து

கிறிஸ்துவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கூறியுள்ளார். இறுதித் தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை என்று கூறினார்.

மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை. ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை என்று கூறினார். பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக பாஜக எம்எல்ஏ காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம் பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக செருப்பு போட்டு மிதிக்கிறோம் என்றும் அடாவடியாக பேசினார்.
தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு பாஜகவினரிடையே மட்டுமல்லாது பெரும்பாலான இந்துக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பொன்னையா கைது

ஜார்ஜ் பொன்னையா கைது

இதனையடுத்து அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனையத்து அவருக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

ஹைகோர்ட் நீதிபதி உத்தரவு

ஹைகோர்ட் நீதிபதி உத்தரவு

இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், மக்கள் நிலத்தை பூமித்தாயாக வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டததில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார்.

மத மோதல் ஏற்படும்

மத மோதல் ஏற்படும்

இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மனுதாரர் பேசிய கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அவர் பேசவில்லை. எனவே, மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டப்பிரிவு 3-ன்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

பிரிவினையை தூண்டுதல்

பிரிவினையை தூண்டுதல்

மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் பால்ஜான்சன் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தைப் படித்தபோது, அதில் ஒரு நம்பிக்கையாளரின் சுய வாழ்க்கை வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நேசிக்க வேண்டும்

நேசிக்க வேண்டும்

அதன் பிறகு நான் இயேசு கிறிஸ்து மீது அளவற்ற அன்பு உள்ளவனாக மாறினேன். அதில் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருரையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் அன்பு, நேசம் என்பது கடவுளிடம் இருந்து வருகிறது. யார் நேசிக்கிறார்களோ அவர்கள் கடவுளுக்குப் பிறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுள் கண்டிப்பார்

கடவுள் கண்டிப்பார்

சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர் டெஸ்மவுண்ட் டுடுவை இழந்து வாடியது. அதுகுறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை, மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், கிறிஸ்துவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் எனக் கருதுகிறேன் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+