இது வேலைக்கு ஆகாது.. தங்க கவச விவகாரத்தில் ‘தேவர்’ குடும்பம் எடுத்த அதிரடி முடிவு! ஷாக்கான அதிமுக!
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவுக்கு இன்னும் பத்து நாட்களை இருக்கும் நிலையில் அதிமுக மோதல் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கும் தேவர் நினைவிட அறங்காவலர்கள் தமிழக அரசின் உதவியை நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார்.
இந்த தங்க கவசம் தற்போது பேங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பில் உள்ளது. 13 கிலோ எடை கொண்ட இந்த தங்கக் கவசம் அதிமுகவின் பொறுப்பில் மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்திருக்கவும், ஒவ்வொரு ஆண்டு ஜெயந்தி விழாவின் போது, அதிமுக பொருளாளர் மூலமா விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஜெயலலிதா வழிவகை செய்திருந்தார்.

தேவர் ஜெயந்தி
இந்நிலையில் தான் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதிமுகவில் தேவரின் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னாள் மதுரை அண்ணாநகர் வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கியதோடு, தான் தான் அதிமுக பொருளாளர் என முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரினார் திண்டுக்கல் சீனிவாசன். இந்த விவகாரம் தொடர்பாக வங்கிக்கு நேரில் சென்ற அவர் தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறை மேற்கொண்டிருக்கிறார்.

தங்க கவசம்
இதேபோல் அதிமுக ஓபிஎஸ் தரப்பும் தான் தான் அதிமுகவின் பொருளாளர் தன்னிடம் தான் தங்க கவசத்தை தர வேண்டும் என வங்கி நிர்வாகத்தை அணுகினார். அவர் தரப்பில் தேனி சையதுகான், இராமநாதபுரம் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் யார் தரப்புக்கு சாதகமாக முடிவு வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனால் இருதரப்புமே பதற்றத்தில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருக்கின்றனர்.

கடும் அதிருப்தி
எது எப்படி எனினும் தேவர் கவச விவகாரத்தில் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என இரு தரப்பினரும் உறுதியாக இருப்பதால் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் தேவர் நினைவிட அறங்காவலர்களின் ஆதரவை பெற அதிமுக இரு தரப்புமே தீவிரமாக முயன்றனர். இரு தரப்பும் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் யாருக்குமே ஆதரவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வங்கி விவகாரத்தை பாதிக்காது என்ற போதிலும் முக்குலத்தோர் சமுதாயத்திடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

தமிழக அரசின் உதவி
இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பந்தல்கள், தடுப்புகள் அமைப்பது என பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்க கவசம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வழக்கமாக 28 அல்லது 29 ஆம் தேதி தங்க கவசம் பெறப்பட்டு நிர்வாகிகளிடம் வழங்கப்படும். ஆனால் அதிமுகவில் மோதலில் இருக்கும் நிலையில், தேவர் அறங்காவலர்கள் தமிழக அரசின் உதவியை நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் தங்க கவசத்தை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications