செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நாடு முழுக்க நடந்த சம்பவம்.. திடீரென அதிகரித்த கிரேஸ்.. என்ன நடக்குது?
சென்னை: செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 12 மாதங்களில் சுமார் 5 லட்சம் புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இத்திட்டத்தின் மீதான மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க மாவட்டங்களில் பிரதான அஞ்சல் அலுவலகத்தில் கடந்த 12 மாதங்களில் ஏறத்தாழ 5 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து அஞ்சல் அலுவலக அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் டிசம்பர் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கணக்கை அஞ்சல் அலுவலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் திறக்கலாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அல்லது 10 வயது அடையும் வரை இக்கணக்கைத் தொடங்கலாம்.
கணக்கைத் திறக்கும்போது குறைந்தபட்சம் ₹250 மற்றும் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை செலுத்தலாம். இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 10 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குவியும் மக்கள்
நாடு முழுக்க இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தங்கள் மாவட்டங்களில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு தினசரி ஏராளமானோர் வருகை தந்து, திட்ட விவரங்களை ஆர்வமுடன் கேட்டுப் பெறுகின்றனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும்.
பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானவுடன், அவரது உயர் கல்விச் செலவுகளுக்காக மொத்த சேமிப்புத் தொகையில் 50% வழங்கப்படும். மேலும், பணி அல்லது வேறு காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் குடும்பங்கள் தங்கள் செல்வ மகள் கணக்கை அங்கேயே மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அஞ்சல் அலுவலகம் சார்பில் அவ்வப்போது விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கிராமப்புற மக்களிடையே இத்திட்டத்தின் மீதான நேர்மறையான போக்கு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் மேலும் பல கணக்குகள் வேகமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் முதல் மாற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த காலாண்டில் முதல் 3 மாதங்கள் வட்டி மாற்றப்படவில்லை என்பதால் கடைசி மாதமான செப்டம்பர் மாதமும் மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .
செல்வமகள் சேமிப்புத் திட்டம் - வட்டி விகிதம் எவ்வளவு?
தற்போது இத்திட்டத்தின் கீழ் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஜனவரி 22, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெண்களின் சேமிப்பை ஊக்குவித்து, அவர்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகப்படுத்திய பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் தனித்துவமானது. பெண்களின் எதிர்கால நலனை மையமாகக் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தால், பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக, முதலீடு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 11,16,815 வரை சேமிக்க முடியும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், கணக்கு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும். இத்திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடைந்த தொகையைப் பெறலாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications