நிம்மதி பெருமூச்சுவிட்ட வேளச்சேரி மக்கள்.. கிண்டியில் பாய்ந்தோடிய மழைநீர்!
சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் குளங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இன்று பெரும் அளவில் மழைநீர் குளத்திற்கு சென்று தேங்கியுள்ளது. இதனால் வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் மழைநீர் தேங்கவில்லை. எனவே அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கிண்டியில் குதிரை பந்தையம் நடந்த ரேஸ் கிளப் மைதானம் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால் குத்தகைக்கான பணம் முறையாக வசூலாகாததால், அந்த இடத்தை தமிழ்நாடு அரசு கைப்பற்றியது. கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்குவதாலும், ரேஸ் கோர்ஸ் பகுதியை குளமாக மாற்றினால், மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் யோசனை வழங்கியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் குளங்கள் வெட்டும் பணிகள் தீவிரமடைந்தன.

160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் 4.24 மில்லியன் கனஅடி அளவில் 4 குளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு குளம் முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குளத்தில் நீரை தேக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் இந்த குளத்திற்கு வந்திருக்கின்றன. இதனால் குளத்தில் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதேபோல மற்ற மூன்று குளங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. இதன் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் தென் சென்னையில் கிண்டியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்காது. இதனால் வேளச்சேரி மழை வெள்ளம் பாதிப்பு இல்லாத பகுதியாக மாறும். ஆகவே இக்குளம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் தென் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு தொடங்கி தற்போதுவரை சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் 4 மி.மீ, மாதவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு முதல் மழை பெய்து வந்தாலும், சென்னையில் உள்ள சுரங்க பாதையில் மழை நீர் தேங்கவில்லை.
மேலும் "அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன மிக கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
எனவே, மழைக்கு முன்பாக கிண்டி குளம் தயார் செய்யப்பட்டிருப்பது சென்னை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications