ஹேப்பி நியூ இயர் 2024: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்ற மக்கள்! சென்னை கடற்கரை சாலைகளில் உற்சாகம்
சென்னை: 2023ஆம் ஆண்டு சற்று முன்னர் நிறைவு பெற்று, 2024ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புதிய 2024ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் முக்கிய நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல் பாடலுடன் நடைபெற்றது. மால்கள், பூங்காக்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தனர். உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டர். மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 450 இடங்களில் வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடிபோதையில் யாரேனும் வாகனம் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என கடுமையான வார்னிங் கொடுக்கப்பட்டிருந்தது.
களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரை சாலையில் குவியும் மக்கள்.. பலர் ஏமாற்றம்!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், மணிக்கூண்டில் ஒலி எழுப்ப, 'ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகம் பொங்க கோஷம் எழுப்பிய இளைஞர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்தனர்.
மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நேற்று இரவு 8 மணியில் இருந்து அப்பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், மெரினாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் நடந்து வந்து அப்பகுதிகளில் குவிந்து, புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். பார்களில் போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை போலீசாரும் தீவிரமாக கண்காணித்தனர். அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications