என் தாய் வீடு..போகும் பாதை பெரியார் பாதை.. பெரியார் திடலில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சியை பெறுகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

பெரியார் உலகம்
சமூக நீதி, பெண் கல்வி, சம உரிமை மற்றும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தலைவர் பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகம் கட்ட, காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பெரியாரின் சீடர்
உலக தமிழர்களின் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் பெரியார் உலகம் என்று நம்முடைய ஆசிரியர் அதற்கு பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் பெருகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகத்தலைவர் பெரியார்
பெரியரை உலகத்தலைவராக உயர்த்திக்காட்டவே பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது. 10 வயதில் பெரியாரின் சீடராக இணைந்து தற்போது 90 வயதிலும் தொண்டாற்றி வரும் ஆசிரியரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும் உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டால் பத்து வயதிலேயே பகுத்தறிவு பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் என்று பேரறிஞர் அண்ணாவே ஒருமுறை கூறியுள்ளார்.

பெரியார் பாதை
வீரமணி என்றால் வெற்றி மணி என்று நம்முடைய தலைவர் கருணாநிதி ஒருமுறை பாராட்டியுள்ளார். 90 வயதை தொடும் போதும் அதனால்தான் உற்சாகமாக இருக்கிறார். நாங்கள் செல்லும் பாதையே பெரியார் திடல் பாதைதான். இதை நான் பலமுறை தொடர்ந்து கூறியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை நாளிதழ் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார் வீரமணி. அத்தகைய திசை வழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

திமுக உறுதி மொழி
தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றக்கூடிய செயலை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு தேவையான வாய்ப்புகளை திராவிட முன்னேற்றக்கழகம் செய்யும். இதுவே தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளில் அனைவரும் எடுத்துக்கொண்டிருக்கக் கூடிய உறுதி மொழி. அந்த உறுதிமொழியின் படி கடமையாற்றுவோம் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமூக நீதியின் தலைமையகம்
ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சமூக நீதியின் தலைமையகமாக பெரியார் திகழ்ந்து வருகிறது. பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சியை பெறுகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சியை பெறுகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications