சர்ச்,மசூதி பக்கத்தில் பெரியார் சிலை இல்லையா? விவரம் தெரியாம பேசாதீங்க கஸ்தூரி! ஆதாரத்துடன் அட்டாக்
சென்னை : பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சை கிளப்பிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பேசுவது போல சர்ச் மசூதிக்கு முன்னர் பெரியார் சிலை இல்லை என நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு பெரியார் சிலை இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன்,"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தயுள்ள நிலையில், சமூகத்தில் கலவரத்தை தூண்டு வகையில் பேசிய அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கனல் கண்ணன் சர்ச்சை
இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி
இந்நிலையில் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பேசுவது போல் நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"Sincere qn. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ, கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன்" என பதிவிட்டுருந்தார்.

கடும் விமர்சனம்
நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலரும் கஸ்தூரியை விமர்சித்து வரும் நிலையில் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னவரை இப்போது வரை காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது ஆனால் பெரியார் சிலை அதே இடத்தில் தான் இருக்கிறது எனவும் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்திருந்தார்.

ஆதாரங்கள்
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரியாரிய ஆதரவாளர்கள் கோவில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்ச்சுகள் மசூதிகள் முன்னர் உள்ள பெரியார் சிலையின் புகைப்படங்களை புகைப்படங்களை நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மசூதி பக்கத்தில் பெரிய பெரியார் சிலை இருக்கா சர்ச் பக்கத்தில் சிலை இருக்கா என்று கேட்கும் நபர்களுக்கு.. கடவுள் இல்லை என்றால் எந்த கடவுளும் இல்லை என்று தான் அர்த்தம்.." என பதிவிட்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications