சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. நேற்றைய விலையே தொடர்கிறது
சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.08 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.38 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.08, டீசல் லிட்டர் ரூ 93.38 என்ற அளவில் விற்பனையானது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தமிழக அரசு வரி குறைப்பு செய்துள்ளதால் பெட்ரோல் விலை இந்த அளவு உள்ளது. பிற மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மூன்று இலக்கத்தை விட்டு குறையவே இல்லை என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications