இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் சில "சக்திகள்" தடுக்கின்றன.. பிடிஆர் பரபர அட்டாக்!
சென்னை: உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? இதை எதோ ஒரு சக்தி தடுக்கிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் சமயத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்கா தனது ரிஸர்வேஷனில் இருக்கும் கச்சா எண்ணெயையை எடுக்கும் அளவிற்கு கூட நிலைமை கைமாறி போனது.
இதனால் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 104 டாலருக்கு கூட விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.
மத்திய அரசு நலத்திட்டங்களைப் பெற தமிழக அமைப்பு சாரா தொழிலாளர் 37% பேர் மட்டுமே பதிவு!

பெட்ரோல் டீசல்
ஆனால் அதன்பின் போரின் வீரியம் குறைந்தது. அதோடு இந்தியா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்தன. இதனால் கச்சா எண்ணெய் விலை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 73 டாலராக குறைந்துள்ளது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.

ரஷ்ய போர்
கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்தாலும் கூட.. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட அதே விலையிலேயே இருக்கிறது. இந்தியாவில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. 200 நாட்களுக்கு முன் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

கச்சா எண்ணெய்
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும். இதையடுத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தது.

பணவீக்கம்
பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

பிடிஆர் கேள்வி
ஆனால் அதன்பின் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவே இல்லை. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவே இல்லை. தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதை விமர்சனம் செய்துள்ளார். கச்சா எண்ணெய் விலை குறைந்த டேட்டாவை பகிர்ந்து, அவர் செய்துள்ள விமர்சனத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. இந்தியாவில் சில "சக்திகள்" விலையை குறைக்க விடாமல் செய்வது போல உள்ளது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்,.