உங்கள் கடமையை செய்யுங்கள்... தயவு செய்து வாக்களியுங்கள் - ஓட்டு போட்ட பின் குஷ்பு செல்ஃபி
உள்ளாட்சித் தேர்தல் ஒரு வலுவான அடித்தளத்தின் அடித்தளம். உங்கள் கடமையைச் செய்யுங்கள்
சென்னை: ஒவ்வொரு தேர்தலும் முக்கியமானது என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கூறியுள்ளார். வாக்களித்த பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு உள்ளாட்சித் தேர்தல் ஒரு வலுவான அடித்தளத்தின் அடித்தளம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல முனை போட்டி உள்ளதால் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர் வேட்பாளர்கள்.

திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக,அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம என அனைத்து கட்சியினருமே தங்களின் சொந்த பலத்தை நிரூபிக்க தனித்து களமிறங்கியுள்ளனர்.
வார்டு கவுன்சிலர் தேர்தல் என்பது சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தலை விட அதிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலை கவுரவப்பிரச்சினையாக கருதி வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். சிலர் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளனர். வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற பின்னர் செல்வாக்கான வேட்பாளர் மேயராகவும் வர வாய்ப்புள்ளதால் மாநகர வார்டு கவுன்சிலர்கள் பதவியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு வேட்பாளர்கள் உள்ளனர்.
நடிகர் விஜய் காலையிலே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார். முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார்.
நடிகை குஷ்பு காலையிலே வந்து வாக்களித்து விட்டு அதை செல்ஃபி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு படு மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நடிகை குஷ்பு.
ஒவ்வொரு தேர்தலும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, உள்ளாட்சித் தேர்தல் ஒரு வலுவான அடித்தளத்தின் அடித்தளம் என்று பதிவிட்டுள்ளார். உங்கள் கடமையைச் செய்யுங்கள். தயவுசெய்து வாக்களியுங்கள் என்றும் குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
