சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.. எந்த மாவட்டம் கடைசி தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது... 90.07% மாணவர்கள் தேர்ச்சி *Tamilnadu

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேனியிலிருந்து ஓபிஎஸ் திடீர் யூ டர்ன்.. சென்னை பயணம்! அலர்ட் செய்த 'ஸ்லீப்பர் செல்”.. இவரா? தேனியிலிருந்து ஓபிஎஸ் திடீர் யூ டர்ன்.. சென்னை பயணம்! அலர்ட் செய்த 'ஸ்லீப்பர் செல்”.. இவரா?

    +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெற்றது.

     பிளஸ் 1 பொதுத்தேர்வு

    பிளஸ் 1 பொதுத்தேர்வு

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் +1 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 10 மற்றும் 12ஆவம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியான நிலையில், இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

     தேர்ச்சி விகிதம்

    தேர்ச்சி விகிதம்

    மொத்தம் 8.3 லட்சம் மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து இருந்த நிலையில், அவர்களில் 41,376 பேர் தேர்வு எழுதவில்லை என்று தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு +1 தேர்ச்சி விகிதம் 90.07%ஆக உள்ளது. வழக்கம் போல மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99% ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 84.6% ஆகவும் உள்ளது.

     முதல் இடம் கடைசி இடம்

    முதல் இடம் கடைசி இடம்

    மாவட்ட வாரியாக பார்க்கும் போது பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பெரம்பலூரில் தேர்ச்சி விகிதம் 95.56%ஆக உள்ளது. அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 95.44 சதவிகித தேர்ச்சி உடன் 2ஆம் இடத்திலும், மதுரை மாவட்டம் 95.25 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 80.02% தேர்ச்சி உடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

     தேர்வு முடிவுகள்

    தேர்வு முடிவுகள்

    அதேபோல மாநிலத்தில் இருக்கும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100%ஆக உள்ளது. இன்று காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    English summary
    Plus one results latest updates in tamil: (பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்) Plus one results latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X