சென்னை: தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாப்போம்; ஈழத் தமிழர் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சி தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் காணலாம்.
Newest FirstOldest First
1:14 PM, 14 Feb
முதல்வர், துணை முதல்வருடன் கரம் கோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி
1:12 PM, 14 Feb
கொரோனாவுக்கு எதிரான உலகின் போரை இந்தியா வலிமையாக்கி வருகிறது.
இந்திய தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவி வருகிறது- பிரதமர் மோடி.
1:12 PM, 14 Feb
மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்- பிரதமர் மோடி
1:08 PM, 14 Feb
மீனவர்கள் பிரச்சனை நீண்டகாலமாக இருக்கிறது.
மீனவர் பிரச்சனையின் வரலாற்றுக்குள் செல்லவில்லை.
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்வதை உறுதி செய்திருக்கிறோம்.
எங்கள் ஆட்சியில் 1600க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை சிறையில் ஒரு மீனவர் கூட இல்லை-313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன- பிரதமர் மோடி.
1:08 PM, 14 Feb
யாழ். - மன்னார் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை இயக்கப்படுகிறது.
யாழ். கலாசார மையம் விரைவில் திறக்கப்படும்.
ஈழத் தமிழர்கள் சமத்துவம், சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம்- பிரதமர் மோடி.
1:05 PM, 14 Feb
ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்.
மலையகத் தமிழர்களுக்கு 4,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்.
1:03 PM, 14 Feb
தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் அல்ல- நீதியானது.
தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது- பிரதமர் மோடி.
1:01 PM, 14 Feb
தேவேந்திர குலவேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு.
2015-ல் டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் சந்திப்பு.
தேவேந்திரகுல வேளாளர்களின் கண்ணியத்தை காலனிய அரசு பறித்தது.
தேவேந்திர என்பதும் நரேந்திர என்கிற என் பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன்- பிரதமர் மோடி.
12:59 PM, 14 Feb
தேவேந்திரகுல வேளாளர் என அரசியல் சாசன திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்- பிரதமர் மோடி
12:57 PM, 14 Feb
கருணை, விடா முயற்சியின் சின்னம் இந்திய மீனவர்கள்.
சமூகம், பொது உள்கட்டமைப்புகள் அதிவிரைவாக மேம்படுத்தப்படுகின்றன.
கிராமங்கள் அனைத்துக்கும் மின்வசதிக்காக புதிய இயக்கம் தொடக்கம்- மோடி.
12:56 PM, 14 Feb
இந்திய மீனவர்கள் குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது.
மீன்பிடி தொழிலுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
கடல்பாசி வளர்ப்பு தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது- மோடி
12:56 PM, 14 Feb
இந்திய மீனவர்கள் குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது.
மீன்பிடி தொழிலுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
கடல்பாசி வளர்ப்பு தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது- மோடி
12:56 PM, 14 Feb
பன்னோக்கு கடல்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும்- பிரதமர் மோடி
12:56 PM, 14 Feb
சென்னை உட்பட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்- பிரதமர் மோடி
12:54 PM, 14 Feb
சீர்திருத்தங்களில் அரசு உறுதியாக உள்ளது என்பதை பட்ஜெட்டில் காட்டி உள்ளோம் - பிரதமர் மோடி
இந்திய கடலோர பகுதிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்- பிரதமர் மோடி
12:52 PM, 14 Feb
2 லட்சம் சதுர அடியில் சென்னை டிஸ்கவரி வளாகம்.
கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும் டிஸ்கவரி வளாகம்- பிரதமர் மோடி.
12:51 PM, 14 Feb
நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும்.
பாதுகாப்பு துறையில் தற்சார்பை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம் - பிரதமர் மோடி.
12:48 PM, 14 Feb
2 பாதுகாப்பு துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது.
எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அர்ஜூன் டாங்கியில் பயன்படுத்தும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது- பிரதமர் மோடி.
12:46 PM, 14 Feb
இந்தியா பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- பிரதமர் மோடி
12:46 PM, 14 Feb
2 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை மறந்துவிட முடியாது.
புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்- பிரதமர் பிரதமர் மோடி.
12:42 PM, 14 Feb
தங்க நாற்கர இணைப்பில் அத்திப்பட்டு- எண்ணூர் மார்க்கம் முக்கியமானது- மோடி
12:42 PM, 14 Feb
சென்னை மெட்ரோ விரைவாக விரிவாக்கம் அடைந்து வருகிறது.
சென்னையில் 119 கி.மீ நீளமுள்ள மெட்ரோ திட்டத்துக்கு ரூ63,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
12:42 PM, 14 Feb
வண்ணாரப்பேட்டை- விம்கோ சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்திலும் குறித்த நேரத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளூரிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பு என்பது சுயசார்பு பாரதம் இலக்குக்கு ஊக்கம் தரும்- பிரதமர் மோடி.
12:41 PM, 14 Feb
ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும்.
நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை- மோடி.
12:36 PM, 14 Feb
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி - மோடி
12:36 PM, 14 Feb
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு- பிரதமர் மோடி
12:36 PM, 14 Feb
அவ்வையாரின்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்ற பாடலை மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் மோடி.
12:35 PM, 14 Feb
கல்லணை கால்வாயை சீரமைக்கும் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்- மோடி
12:34 PM, 14 Feb
புதுமை, உள்நாட்டு உற்பத்திக்கு சாட்சியாக இந்த திட்டங்கள் உள்ளன - மோடி
12:33 PM, 14 Feb
பல முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன - மோடி
READ MORE
8:20 AM, 14 Feb
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார்.
தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி.
8:20 AM, 14 Feb
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
8:20 AM, 14 Feb
பிரதமர் மோடி காலை 10.35 மணியளவில் சென்னை வந்தடைகிறார்
8:24 AM, 14 Feb
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
8:24 AM, 14 Feb
ரூ4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
8:24 AM, 14 Feb
ரூ3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
8:25 AM, 14 Feb
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
8:27 AM, 14 Feb
சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையேயான 4-வது ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
8:27 AM, 14 Feb
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டாங்கியை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
8:28 AM, 14 Feb
இந்திய தொழில்நுட்ப கழகத்தின் டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
8:28 AM, 14 Feb
கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
8:29 AM, 14 Feb
சென்னையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
8:36 AM, 14 Feb
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackModi டிரெண்டிங்.
பிரதமர் மோடியை வரவேற்று ட்விட்டரில் #TNWelcomesModi டிரெண்டிங்.
8:36 AM, 14 Feb
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
8:36 AM, 14 Feb
தமிழக பயணத்தை நிறைவு செய்த பின்னர் பிற்பகல் கேரளா செல்கிறார் பிரதமர் மோடி
8:36 AM, 14 Feb
மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு
8:40 AM, 14 Feb
சென்னையில் சாலை வழியாக பிரதமர் மோடி செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
8:50 AM, 14 Feb
சென்னையில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தனியே சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்
விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
9:07 AM, 14 Feb
பிரதமர் மோடி வருகை- சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்
9:12 AM, 14 Feb
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கறுப்பு நிற முக கவசம் - தொப்பிகள் அணிய போலீஸ் அனுமதி மறுப்பு
9:14 AM, 14 Feb
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது. https://t.co/NZUT66cjrt
தமிழகம் வருகை தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தமிழில் பதிவிட்ட ட்வீட்
9:18 AM, 14 Feb
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடை
9:34 AM, 14 Feb
சென்னை ஐ.என்.எஸ். அடையாறில் இருந்து பிரதமர் மோடி 4 கி.மீ. சாலை வழியாக நேரு விளையாட்டரங்கத்துக்கு பயணம்.
பிரதமர் மோடி பயணிக்கும் சாலையில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை வந்தடைகிறார் பிரதமர் மோடி.
பறை இசை உள்ளிட்டவைகளுடன் நேரு விளையாட்டு அரங்கம் அருகே பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்படுகிறது