சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருடன் கூட்டணி?... நான்தான் முடிவு செய்வேன்.. ராமதாஸ் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ட்வீட்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கூறியுள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்கான களப்பணிகளில் பாரபட்சமின்றி தேசிய,மாநில கட்சிகள் இறங்கியுள்ளன. திமுக தேர்தல் குழுவை அறிவித்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க ஆயத்தமாகி உள்ளது.

    Pmk gave full rights to me to decide lok sabha election alliance, says ramadoss in twitter

    அதிமுகவோ.. கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாகவும், கட்சியின் செயற்குழுவில் யாருடன் கூட்டணி என்று முடிவு செய்யப்படும் என்று கூறி வருகிறது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளானது திமுகவுடன் கரம் கோர்த்துள்ளது.

    பாஜகவுடன், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணியாக லோக்சபா தேர்தலை சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந் நிலையில் கூட்டணி தொடர்பான கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கூறியுள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்று ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

    மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பாமகவின் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து, ஊடகங்கள் கற்பனைக்குதிரையில் சவாரி செய்து, உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

    கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுத்தவுடன், அதனை வெளிப்படையாக அறிவிப்பேன் என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

    English summary
    PMK will decide lok sabha alliance later says party founder Dr. Ramadoss in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X