’அந்த’ பேச்சை உடைக்கனும்! கொங்கில் கவனம் செலுத்தும் பாமக அன்புமணி! திமுக-அதிமுக சவாலை சமாளிப்பாரா?
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவருடைய பார்வையானது கட்சி பலமாக இருக்கும் வட மாவட்டங்களை தாண்டி, மேற்கு மாவட்டங்கள் பக்கமும் திரும்பி இருப்பதாகவும், இதன் காரணமாகவே கொங்கு மாவட்டங்களில் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
கடந்த மே மாதம் 28ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், வட மாவட்டங்களை பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளுக்காக சுற்றி வந்த நிலையில், கொங்கு பகுதிகளிலும் அவ்வப்போது தனது நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் அவர் மேற்கு மாவட்டங்களிலும் கட்சியை பலப்படுத்துவதற்கான வேலையில் இறங்கியுள்ளதாகவும், இதனால் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு ஆதரவு அதிகரித்திருப்பதாகவும், அடுத்தடுத்து பல திட்டங்களை மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திரன் கோயில் அடிக்கல் விழா
கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற இந்திரன் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, தலைமை ஏற்று விழாவினை நடத்தி கொடுத்தார் அன்புமணி. தேவேந்திர குல வேளாளர்கள் நடத்திய இந்த விழாவிற்கு சென்ற போது, அன்புமணிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதே நாளில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்ற அன்புமணி ராமதாஸ் அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த பொதுக்கூட்டமானது, மிகப்பெரிய அளவில் மக்களை கூட்டி நடத்தப்பட்ட விதம், பாமகவை கடந்து அனைத்து கட்சிகளையும் பேச வைத்தது. அந்த பொதுக்கூட்டம் கொடுத்த உற்சாகம் அடுத்த நாள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார் அன்புமணி.

இஸ்லாமிய தலைவர்கள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பாமக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் இல்ல திருமணத்தில், கலந்து கொண்டு பேசிய இஸ்லாமிய தலைவர்கள் பலரும் பாமக மற்றும் டாக்டர் இராமதாஸை வெகுவாக பாராட்டி பேசினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும், டாக்டர் ராமதாஸும் இஸ்லாமியர்களுக்காக என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை பெருமையாக பேசியது அன்புமணிக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

பல்லடம் பொதுக்கூட்டம்
அக்டோபர் 20ஆம் தேதி கோவை சென்ற திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு கொங்கு மண்டலத்தில் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு இருக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரங்கள் நின்ற இடத்தில் இருந்தே, கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும், தற்போது இருக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் மிக தெளிவாக பேசி இருக்கிறார். அக்டோபர் 21ம் தேதி கோவையில் மிகப்பெரிய அளவில் பாமக அலுவலகமும் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் அன்புமணி கலந்துரையாடியிருக்கிறார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
கொங்கு மண்டலத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை மிக விரைவாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி வருவதுடன், அந்த திட்டத்திற்காக பாமக நடத்திய, கலந்து கொண்ட போராட்டங்களையும், ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுகூர்ந்து வருகிறார். மேலும் கேரளா அரசும் தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய நீர்பாசனத் திட்டங்கள் குறித்தும், அதற்காக திமுகவும், கம்யூனிஸ்ட்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அக்கட்சிகளுக்கு நெருக்கடியையும் அளித்து வருகிறார்.

அதிமுக - பாஜகவிற்கு சவால்
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை, அதிமுக வலுவான கட்சியாக இருந்தாலும், கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு அக்கட்சியில் நடக்கும் உட்கட்சி குழப்பமானது பலத்த பின்னடைவை உருவாக்கி உள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்காக பாஜக முயற்சி செய்து வரும் வேளையில், பாமக தலைவர் அன்புமணி கொங்கு மண்டலத்தில் தீவிரமாக கவனம் செலுத்துவது அதிமுக மற்றும் பாஜகவினரை யோசிக்க வைத்திருக்கிறது. அதிமுக, திமுகவின் சவாலை சமாளித்து, அன்புமணி தன் உழைப்பின் பலனை கொங்கு மண்டலத்தில் பெறுவாரா என்பதை எதிர்காலத்தில் மக்களின் முடிவு தான் சொல்லும்.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications