நூறு வருஷம் வாழனும்! ரஜினிகாந்தை வாழ்த்திய அன்புமணி! பாபா ரிலிசில் சண்டை.. ரீ-ரிலீசில் சமாதானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று 73வது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா 2000ல் வெளியான போது பாமகவினர் மிகத் தீவிரமாக எதிர்த்த நிலையில், ரீ-ரிலிசின் போது ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார் அன்புமணி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழக மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ரசிகர்களை உசுப்பேற்றிய நிலையில் திடீரென அரசியலுக்கு வர மாட்டேன் என என்ட்ரிக்கு எண்ட் கார்டு போட்டார்.

இதன் காரணமாக 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பொறுமை இழந்து தற்போது வேறு வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர் தற்போது ஜெயிலர் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் இன்று பிறந்தநாள் காண்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

அரசியல் ஆன்மீகம் உள்ளிட்ட ரஜினிகாந்தின் கருத்துகளுக்கு பலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு நடிகராக ரஜினிகாந்தை கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. 80ஸ் கிட்ஸ் தொடங்கி தற்போது 2கே கிட்ஸ்கள் வரை நடிகராக ரஜினிகாந்தை ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அந்த வகையில் இன்று 73வது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!" என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா 2000ல் வெளியான போது பாமகவினர் மிகத் தீவிரமாக எதிர்த்த நிலையில், ரீ-ரிலிசின் போது ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார் அன்புமணி.

பாபா படம்

பாபா படம்

பாபா படத்தில் இருந்து அதாவது 2000ஆம் ஆண்டில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சிக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் மோதல் இருந்திருக்கிறது. கர்நாடகாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீரப்பனை கொல்ல வேண்டும் என்று பேசியதாக பாமகவினரும் வன்னியர் சங்கமும் முதன் முதலாக களம் இறங்கின. தொடர்ந்து இந்த மோதல் ஜாக்குபாய் மற்றும் பாபா படத்தில் வெடித்தது. பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையில் சிகரெட் இருந்ததை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான ராமதாஸ் கடுமையாக எதிர்த்ததோடு இளைஞர்களை அவர் கெடுக்கிறார் எனவும் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டது.

தொடர்ந்தது

தொடர்ந்தது

அப்போது பாமகவினரும் ரஜினி ரசிகர்களும் நேரடியாக மோதிக் கொண்டனர். தொடர்ந்து காவிரி பிரச்சனை, பெரியார் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ரஜினிக்கு எதிராகவே பாமக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்புமணி ராமதாஸ் - ரஜினி இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதையும் பார்க்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ரஜினிகாந்த் குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். ரஜினி நடித்த பாபா படம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு மறுபடியும் வெளியான நிலையில் அதில் மது மற்றும் புகை பிடிப்பது தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறித்து பாமகவின் நிலைப்பாடு என்ன என அன்புமணி ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர்.

திடீர் ஆதரவு

திடீர் ஆதரவு

அதற்கு பதிலளித்த அவர்," பாபா படத்தில் மட்டும் தான் அந்த விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதா மற்ற எந்த படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இடம் பெறவில்லையா மற்ற படம் எல்லாம் புத்தர் சம்பந்தமான படமா நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் சமுதாய பொறுப்புணர்வு கடமை உணர்வு அதிகம் உடையவர். எது நல்லது கெட்டது என எல்லாம் அவருக்கு நன்றாக தெரியும். எது தவிர்க்க வேண்டும். எது தவிர்க்கக் கூடாது என்கிற கடமை உணர்வு எல்லாம் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும்" என கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புமணியையும் பல மேடைகளில் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+