பாமக இளைஞரணி தலைவர் தமிழ்க்குமரன் பதவி விலகல்.. 3 மாதங்களில் முடிந்த லைகா நிர்வாகியின் பயணம்!
சென்னை: பாமக இளைஞரணி தலைவராக இருந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி அன்புமணி ராமதாஸ்-க்காக பதவி விலகிய நிலையில், அன்புமணி ராமதாஸ் வகித்த இளைஞரணி தலைவர் பதவி தமிழ்க்குமரனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பதவியில் நியமிக்கப்பட்ட 3 மாதங்களில் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த மே மாதம் பதவியேற்றார். இதனால் அன்புமணி ராமதாஸ் வகித்து வந்த இளைஞரணித் தலைவர் பதவியை கைப்பற்ற பாமக முன்னணி நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டினர்.
ஆனால் படித்த, நிர்வாக திறமைமிக்க இளைஞரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பதில் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருந்தார். இதனால் சில மாதங்கள் இளைஞரணி தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் இடையே அதிகரித்தது.

இளைஞரணித் தலைவர் தமிழ்க்குமரன்
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ்-க்கு வழிவிடும் வகையில் பாமகவில் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஜி.கே.மணி, தனது மகன் தமிழ்க்குமரனை பாமக இளைஞரணித் தலைவராக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நியமன கடிதத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அக்டோபரில் வழங்கினார்.

லைகா நிறுவனத்தில் தமிழ்க்குமரன்
ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ் குமரனை பொறுத்தவரை நன்கு படித்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத் திறமையும் மிக்கவர். அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன், 2.0 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நட்புகள் காரணமாக சென்னையில் சூற்றுச்சூழல் தொடர்பான அன்புமணி ராமதாஸ் நடத்திய பேரணியில் இயக்குநர் விக்னேஷ் சிவன், சித்தார்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்க்குமரன் ராஜினாமா
தொடர்ந்து நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழ்க்குமரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு எழுதிய கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி - தமிழ்க்குமரன்
அக்டோபர் மாதத்தில் இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அடுத்த 3 மாதத்தில் பதவியில் இருந்து விலகியுள்ளது கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணிக்கும் - தமிழ்க்குமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் தமிழ்க்குமரன் பதவியை ராஜினாமா செய்வதற்கு அன்புமணி தான் காரணமா என்று நிர்வாகிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications