பனங்கிழங்கின் பயன்கள் என்னென்ன?.. கவிதை வடிவில் அருமையாக விளக்கிய கவிப்பேரரசு வைரமுத்து.. செம ட்வீட்
சென்னை: இன்றைய நவீன உலகில் 'உடலில் சத்துக்களை பெருக்கும்' என்ற பெயரில் இரசாயனம் மிக்க எந்தெந்த பொருட்களையோ உண்கிறோம். ஆனால் இந்த பொருட்கள் நமக்கு சத்துகளை கூட்டுகிறதோ இல்லையோ, இலவசமாக ஏராளமான நோய்களை கூட்டி வந்து விடுகிறது.
நமக்கு மிக எளிய வகையில் இயற்கையாக கிடைக்கும் காய்கனி, கீரைகள், கிழங்குகளில் எண்ணற்ற சத்துக்கள் பெருகி கிடக்குகின்றன. ஆனால் நாம் இவற்றை பயன்படுவதில் பெரிதும் தயக்கம் காட்டி வருகிறோம்.

மேற்சொன்ன பட்டியலில் வரும் மகத்துவம் மிக்க ஒரு உணவுப்பொருள்தான் பனங்கிழங்கு. 'பனை மரம்' என்றாலே 'பண மரம்' என்று பொருள் கொள்ளலாம். அந்த அளவுக்கு பனை மரத்தின் பனை ஓலை, நுங்கு, பதநீர் என அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன்தரக்கூடியவைதான். இந்த வகையில் பனங்கிழங்கின் அருமை நகரத்தில் வசிப்பவர்களை விட கிராமப்புற மக்களுக்கு அதிகம் தெரியும்.
இந்த பனங்கிழங்கின் பயன்களை கவிதை வடிவில் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
நார்ச்சத்து மிக்கது;
மலச்சிக்கலறுப்பது
வயிற்றுச் சுவர்களை
வலிமை செய்வது
இரும்புச் சத்துள்ளது;
இன்சுலின் சுரப்பது
தமிழ்நாட்டுத் தாவரத்தின்
தனிப் பொருளாவது
நோயெதிர்ப்பாற்றல்
மிகுதி செய்வது
நானும் உண்கிறேன்;
நீங்களும் உண்ணலாம்
பனங்கிழங்கு

என்று கூறியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் கூறியபடி இதுவரை பனங்கிழங்கை சாப்பிடாதவர்கள் சாப்பிட்டுத்தான் பாருங்களேன். அதன்பிறகு பனங்கிழங்கின் மகத்துவம் உங்களுக்கே புரியும்.












Click it and Unblock the Notifications