ஒரே நேரத்தில் ரெண்டு பொண்ணு! சென்னையை உலுக்கிய பாஸ்கரன் கொலை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
சென்னை : சென்னையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் மிதந்த தொழிலதிபரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி விசாரணை நடத்திய போலீசாரையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில் நேற்று முன்தினம் காலை துப்புரவு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தபோது அருகே உள்ள கால்வாயில் கருப்பு கலர் பிளாஸ்டிக் கவரில் சடலம் ஒன்று இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் பாலித்தீன் கவரை மீட்டு பிரித்து பார்த்தபோது திக் நைலான் கயிறால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையிலும் ஆண் சடலமொன்று உடல் முழுவதும் ரத்தக் கறையோடு இருந்துள்ளது.

சென்னை கொலை
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்றும், இவர் வைப்ரேஷன் இன்ஜினியரிங் கன்சல்டிங் சர்வீஸ் கம்பெனியின் உரிமையாளர் எனவும் தெரியவந்தது. இந்த நிறுவனமானது கட்டிடத்தை உறுதித் தன்மையோடு கட்டித் தருவதற்கு பிளான் போட்டுக்கொடுக்கும் கட்டுமான நிறுவனமாகும்.

கொடூர கொலை
மேலும் பாஸ்கரன் சினிமா தயாரிப்பாளராகவும் பணியாற்றியதாகக் கூறப்ப்படுகிறது. தொழிலதிபரான இவர் கொலை நடந்ததுக்கு முன்னர் நள்ளிரவு வரை தனது மனைவிக்கு தொலைபேசியில் பேசியுள்ளார் எனவும் இவரது ஏடிஎம் கார்டில் இருந்து இரவு 10:40, 10:50 என இரண்டு முறை அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே பாஸ்கரனின் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடும் அதிர்ச்சி
இந்த சம்பவம் குறித்து தியாகராய நகர் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் கடத்திக் கொலை செய்து சடலத்தை கால்வாயில் போட்டுவிட்டு சென்றனரா? என பல கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி விசாரணை நடத்திய போலீசாரையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பாலியல் புரோக்கர்
சென்னையையே உலுக்கிய பாஸ்கரன் கொலை வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கணேசன் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த இடத்தில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கணேசனை கைது செய்தனர். கணேசனிடம் விசாரித்த போது அவர் கடந்த சில வருடங்களாக சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கணேசனுடன் அறிமுகமான பாஸ்கரன் அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பெண்களுடன் தனியே இருந்திருக்கிறார்.

கொலை காரணம்?
இந்நிலையில் கொலை நடந்த அன்று இரவு பாஸ்கரன் கணேசனை சந்தித்திருக்கிறார். அப்போது குறிப்பிட்ட இரண்டு பெண்கள் தனக்கு வேண்டும் என பாஸ்கரன் கேட்டதாகவும் அதற்கு கணேசன் அவர்கள் வர தாமதமாகும் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசனை பாஸ்கரன் கோபத்தில் திட்டியதாகவும் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் கணேசன் பாஸ்கரனை கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து பாஸ்கரனை அருகில் இருந்த தூணில் கட்டி போட்டு இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாகவும் உயரிழந்த பாஸ்கரனை கை கால்களை கட்டி வாயில் துணி வைத்து பாலத்தீன் கவரால் கட்டி சாலை ஓரம் வீசிச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும் சென்னையில் கடந்த சில நாட்களாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications