ஆடி அமாவாசை: சென்னையில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை.. போலீசார் உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் அடங்கி இருந்த கொரோனா மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையிலும் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
9-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் எந்த வித தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. மாறாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கட்டுப்பாடுகள்
மத வழிபட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடி வந்தததால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டுப்பாடுகள்
முன்னதாக, மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் தி.நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டது. பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

போலீசார் தடை
இதேபோல் தமிழ்நாட்டில் அதிக கொரோனா பாதிப்புள்ள கோவை மாவட்டத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-ம் தேதி ஆடி அமாவாசை என்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் கூடுவதற்கு சென்னை போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.

நீர் நிலைகளில் செல்ல அனுமதி இல்லை
08.08.21 அன்று ஆடி அமாவாசை என்பதால் கோவிலுக்குள் செல்வதற்கோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கோ சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல் திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரை, கோவில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை போலீசார் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications