குழந்தைகளுக்கு மறக்காம இன்று சொட்டு மருந்து குடுங்க..எதிர்கால தலைமுறையை போலியோ இல்லாமல் காக்கலாம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள்,சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்துகளை போட்டுக் கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக ஆண்டுதோறும் ஆறாவது வாரத்திலும் ,14 வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது.
போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் எனப்படும் நோயானது கழிவு நீர், அசுத்தமான நீர் வழியாக பரவுகிறது. மனிதர்களுக்கு இந்நோய் சுகாதார முறையில் இல்லாத தண்ணீரை அருந்தும் போது பரவுகிறது. கழிவு நீர், மலம் வழியாகவும் இந்நோய் பரவும்.

இந்த வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 90 சதவீத பேருக்கு எந்த வித அறிகுறியும் தோன்றுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் தீவிரமாக பரவி விட்டால் முடக்கு வாதம் ஏற்படுகிறது. குறிப்பாக நரம்பு மண்டலத்துக்குள் பரவினால் இந்த வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கி பக்கவாதத்தை ஏற்படுத்துக்கிறது. இதனால் இந்த நோய் மிகவும் தீவிரம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போலியோ நோயை தடுக்க வாய்வழியாக செலுத்தப்படும் திரவ சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோவை ஒழிக்க பல ஆண்டுகளாக உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் ஏறத்தாழ வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக ஜெருசலேம், நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் போலியோ பரவுவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நாசாவ் கவுண்டி பகுதியில் உள்ள கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் பதறிப்போன அங்குள்ள சுகாதார அதிகாரிகள் போலியோ தடுப்பு மருந்து செலுத்துவதை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த மாகாணத்தில் மட்டும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் சிறப்பு சொட்டு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை செலுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே சுகாதாரத் துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள் ,சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்துகளை போட்டுக் கொள்ளலாம். அத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையங்கள் ,வணிக வளாகங்கள், விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக ஆண்டுதோறும் ஆறாவது வாரத்திலும் ,14 வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது. எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications