இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு சர்ப்ரைஸ்..எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்.. “உங்களில் ஒருவன்”
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான "பபாசி" சார்பில் நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர், தான் சுயசரிதை எழுதியது குறித்தும் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்களில் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் எனவும் சுயசரிதையான அந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கிய போராட்டம் வரை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். விரைவில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய தலைவர்களுக்கு அழைப்பு
இந்த நிலையில் தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும் "உங்களில் ஒருவன்" நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பார் என்கிற புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அத்துடன், சமூக நீதிக்கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய அளவிலான தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலத்த எதிர்பார்ப்பு
அதன் படி, "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளன. இவை தவிர, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், தேசிய அளவில் அடுத்து செய்ய வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பல விஷயங்கள் பற்றி இந்த விழாவின் போது ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டுமென பூச்சி முருகன் அவருக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்க்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிய நிறுவனர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications