Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் எப்போது கிடைக்கும்..கரும்பு கிடைக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 4 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 03 முதல் 8ஆம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை ஜனவரி 09 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பரிசு தொகுப்புடன், கரும்பு, வெல்லம், முந்திரி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொங்கர் பரிசு தொகுப்பை ரேசன் கடைகளில் வாங்குவதற்காக டோக்கன்கள் நேற்று முதல் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் நேற்றைய தினம் டோக்கன்கள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை சேத்துப்பட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் மாவட்டங்களில் இருந்து வந்த கூடுதல் பதிவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் தொகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க எப்படி திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், கடந்த காலங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய போது குறைகளை சுட்டிக்காட்டிப்பட்டது. ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என கூறினார்.

Pongal Parisu token delivery from 30th December says Minister Periya karuppan

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். எதிர்கட்சியினரும் திமுகவின் தோழமை கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார் எனவும் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார். இதற்கான டோக்கன் டிசம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 டோக்கன்கள் விநியோகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, 1000 ரூபாயுடன் முழு கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் ஜனவரி 03ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே இன்று முதல் பயனாளர்களின் வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று விநியோகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அதில், தெரு அல்லது வரிசை வாரியாக டோக்கன் வழங்கவும், டோக்கனில் விபரங்களை சரியாக குறிப்பிட்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற குடும்ப அட்டைதாரர் கடைக்கு வர வேண்டும் என்பது அதில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+