5 லட்சம் கொடுத்தால் 500 கோடிப்பே.. சென்னையில் “சதுரங்க வேட்டை”..பணத்தை இழந்த தாமரை பூவுக்கும் நடிகர்
சென்னை : 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி கிடைக்கும் என்று கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் மோசடி கும்பல் தன்னிடம் சுமார் ஒன்றே முக்கால் கோடி பணத்தை பெற்று விட்டு ஏமாற்றிவிட்டதாக பிரபல நடிகர் விக்னேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
1985 முதல் 1995 வரையிலான காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ்.
கிழக்குச் சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். பல முன்னணி இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் இணைந்து அப்போது பிசியாக நடித்தவர்.

நடிகர் விக்னேஷ்
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை பாடல் அப்போது மிகப்பிரபலம் அதன்பிறகு படவாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சென்னையில் கடை ஒன்றை நடத்தி வரும் அவர் தற்போது தான் இரிடியம் மோசடி கும்பல் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இரிடியம் மோசடி
அதில், " நான் நடத்திவரும் கடையில் ராம் என்பவர் வாடிக்கையாளராக அறிமுகமாகி பழகினார். தொடர்ந்து நண்பர் போல் பேசி பழகி அவர் தனக்கு இரிடியம் விற்பனை குறித்து நன்கு தெரியும் எனவும் தற்போது கையில் பணம் இல்லாததால் அதனை தொடர முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். மேலும் பல கோடீஸ்வரர்களும், தற்போது டாப் நடிகர்கள் பரும் தனது வாடிக்கையாளர்கள் எனக் கூறி நம்ப வைத்துள்ளார்.

1.82 கோடி மோசடி
இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்களை கூறிய ராம் அது தொடர்பாக பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று ரகசிய கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த தொழிலுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டபூர்வ அனுமதி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 5 லட்சம் கொடுத்தால் 500 கோடியாக லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்த ராம் நடிகர் விக்னேஷ் இடம் சுமார் 1.82 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் வழங்காமலும் ஏமாற்றியுள்ளார்.

போலீசில் புகார்
பலமுறை தொடர்பு கொண்டும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய வைத்திருந்த நிலையில் விக்னேஷ் போலவே பலரையும் ராம் ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும் தற்போது அவர் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து இருப்பதாகவும் தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு அவர் கூறியுள்ளார். சதுரங்க வேட்டை சினிமா படம் போல் சினிமாத் துறையைச் சேர்ந்த வருடமே மோசடி கும்பல் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications