அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள்.. அஞ்சல் துறை உறுதி.. சாதித்த சு.வெங்கடேசன் எம்.பி!
சென்னை: தமிழகத்தில் அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள் வழங்கப்படும் என்று அஞ்சல் துறை உறுதி அளித்துள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கையை அஞ்சல் துறை ஏற்றுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்படுவதை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.

எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.

திணிப்பது நியாயமா?
அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. தனது கடிதத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்றுள்ள அஞ்சல் துறை தமிழகத்தில் அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இணைய வழியில் கிடைக்கின்றன
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அஞ்சல் அலுவலக பண விடைகள், சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலை பேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல் துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு 22.09.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

நமது பயணம் தொடரும்.
இன்று நேரில் சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்த போது அவர் இக்கோரிக்கையை ஏற்று இரு மொழிகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் படிவம் கிடைப்பதற்கான செய்தியை தெரிவித்து அதற்கான ஆணையையும் வழங்கினார். இதற்கான அறிவுறுத்தல், ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் எனது கடிதத்தை குறிப்பிட்டு, அமைச்சகத்தின் பதிலில் தரப்பட்டுள்ளது. தமிழன்னை மகிழ்வாள். மொழி உரிமைக்கான நமது பயணம் தொடரும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications