திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு.. ‘அய்யா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில் அவரது பயோபிக் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'அய்யா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Poster of PMK Founder Ramadoss Biopic Ayya Directed by Cheran Unveiled

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ராமதாஸ் பிறந்த நாளில் அவரது பயோபிக் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு அய்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜி.கே.எம். தமிழ்குமரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சேரன் இயக்கத்தில் உருவாகும் 'அய்யா' படத்தின் தலைப்பை வெளியிட்டு ராமதாஸிற்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் இந்தத் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்களை மையப்படுத்தி அய்யா திரைப்படம் உருவாகிறது.

Poster of PMK Founder Ramadoss Biopic Ayya Directed by Cheran Unveiled

இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அய்யா திரைப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நடிகர் ஆரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்த நிலையில், அய்யா படத்தின் வேலைகள் தொடங்கின. இந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+