விடாத மின்வாரியம்.. சென்னையில் இன்றும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: மின்வாரியம் சார்பில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாதம் ஒருமுறை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் தேதி என்பது ஒவ்வொரு ஏரியாவை பொறுத்து மாறுபடும்.

சென்னை மிகப்பெரிய நகராக உள்ளது. இதனால் தினமும் சென்னையின் ஒவ்வொரு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும்போது குறிப்பிட்ட இடங்களில் தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது அமல்படுத்தப்படும்.
அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறும் நிலையில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 24.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடப்பேரி: எஸ்வி கோவில் தெரு, விவி கோவில் தெரு, ரயில்வே பார்டனர் ரோடு, அமர் ஜீவா தெர, சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 முதல் 3 குறுக்கு தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு, சுந்தராம்பாள் நகர், ஷர்மிளா தெரு, வாட்டார் போர்டு, குமரன் தெரு, ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சேலையூர் - செம்பாக்கம்: சேலையூரை பொறுத்தவரை இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாச நகர், அகரம் மெயின் ரோடு, ஜேஜே ராம் காலனி, அம்பேத்கர் தெரு, லட்சுமி நகர், ஐஏஎப் சாலை,, நடராஜன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. அதேபோல் செம்பாக்கம் ஏரியாவை எடுத்து கொண்டால் டெல்லஸ் அவென்யூ - கட்டம் 1 அண்ட் 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications