சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேர்மையின் சிகரம் ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன்.. நெட்டிசன்கள் புகழ் மழை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பயணி ஒருவர் ஆட்டோவில் தவற விட்ட பணம் மற்றும் கிரெட் கார்டு ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Recommended Video

    நேர்மையின் சிகரம் ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன்.. நெட்டிசன்கள் புகழ் மழை.. அப்படி என்ன செய்தார் தெரியுமா

    சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 40). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன்( பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது கண்ணதாசன் நகர் செல்வதாக கூறி ஆட்டோவில் ஒருவர் ஏறியுள்ளார்.

    ஆட்டோ மீது ஆடி கார் மோதினால் என்னவாகும்.. சுற்றி சுழன்று.. பதைக்க வைக்கும் ஹைதராபாத் வீடியோஆட்டோ மீது ஆடி கார் மோதினால் என்னவாகும்.. சுற்றி சுழன்று.. பதைக்க வைக்கும் ஹைதராபாத் வீடியோ

    மணிபர்ஸ் கிடந்தது

    மணிபர்ஸ் கிடந்தது

    அந்த நபரை கண்ணதாசன் நகரில் இறக்கி விட்டு மீண்டும் பெரம்பூர் வந்தார் ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன். அப்போது பின் இருக்கையில் மணிபர்ஸ் ஒன்று இருப்பதை கண்டார். மணிபர்சை சோதனையிட்டபோது அதில் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ரூ.10,000 பணம் இருப்பது தெரியவந்தது.

    போலீசாரிடம் ஒப்படைத்தார்

    போலீசாரிடம் ஒப்படைத்தார்

    இதனை தொடர்ந்து நேராக போலீஸ் நிலையம் சென்றஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன், புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவிடம் அந்த மணிபர்ஸை ஒப்படைத்தார். மணிபர்சில் இருந்த ஆதார் கார்டில் இருந்த முகவரியை பார்த்தபோது அதனை தவற விட்டது ஜெய்சங்கர் (55) என்பது தெரியவந்தது.

    நெகிழ்ச்சியுடன் பாராட்டு

    நெகிழ்ச்சியுடன் பாராட்டு

    இதனை தொடர்ந்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, ஜெய்சங்கரை உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். அங்கு வைத்து அவரிடம் அவருக்கு சொந்தமான மணி பர்ஸ் வழங்கப்பட்டது. காணாமல் போன மணி பர்ஸ் கிடைத்ததால் ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனை, ஜெய்சங்கர் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

    நெட்டிசன்கள் பாராட்டு மழை

    நெட்டிசன்கள் பாராட்டு மழை

    இதேபோல் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவும், ராதா கிருஷ்ணனின் நேர்மையை பாராட்டினார். இந்த கலியுகத்தில் இருக்கும் பணம், சொத்து போதாதென்று அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் இருந்து வருகிறது. ஆனால் ஆட்டோ ஓட்டி சொற்ப வருமானமே வந்த போதிலும், அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாமல் அதனை நேர்மையாக ஒப்படைத்த ராதாகிருஷ்ணனுக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

    English summary
    In Chennai, praise is heaped on an auto driver who handed over a missing card and a credit card to the police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X