எழுதாத பேனாவிற்கு ரூ. 80 கோடியில் சிலை எதற்கு? பெரியார் சிலை வைக்கலாமே..கேட்கிறார் பிரேமலதா
சென்னை: கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று கடவுள் பின்னாடி செல்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே என்று பிரேமலதா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. பேனா சிலை அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. இதற்கு சில அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பேனா சிலை வைப்பதற்கு பதில் அடிப்படை வசதிகளை செய்யலாமே என்று கூறியுள்ளார்.
தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நலமாக உள்ளார் என தெரிவித்தார். இந்த பேனரில் கேப்டனின் இரண்டு கண்கள் எப்படி இருக்கிறதோ, அது போன்று தான் கேப்டன் அனைத்தையும் பார்த்து கொண்டு இருப்பதாக கூறினார்.

தர்மம் வீணாகாது
எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நாம் அடைவோம். நாம் செய்த உதவிகளோ, தர்மங்களோ என்றும் வீண் போகாது எனவும் கூறினார். நாம் செய்த உதவிகளோ தர்மங்களோ என்றும் வீண் போகாது என்றும் பிரேமலதா கூறினார்.

80 கோடியில் பேனா சிலை எதற்கு
எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே? பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே? தங்க பேனாவை தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு விழா வைத்து கொடுத்து விட்டாரே, பின் எதற்கு பேனாவை மீண்டும் வைக்கிறார்கள்.

இந்துக்கள் அவமதிப்பு
திமுக ஆட்சிக்கு வந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். ஆ. ராசா இந்துக்களை பற்றி பேசியது சரியா ?தவறா? என்ற கேள்விகளை மீண்டும் யாரிடமும் கேட்காதீர்கள். இந்து சமய அறநிலை துறை அமைச்சரிடம் கேளுங்கள் என்றார். அவர்கள் தான் பின் வழியாக சென்று பூஜை குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

பெண்மையின் புனிதம் காக்க வேண்டும்
கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று கடவுள் பின்னாடி செல்கிறார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புகை , மது உள்ளிட்ட பழக்கங்களில் சம உரிமை வேண்டும் என பெண்கள் ஈடுபடக் கூடாது. புகை ,கஞ்சா , மது உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாவதால் பெண்கள் பாலியல் துன்பத்தில் சிக்குகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சாதிப்பதில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் .பெண்மையின் புனிதத்தை காக்க வேண்டும் என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications