சென்னையில் சொத்து வரி 300% கூடியிருக்கு.. அறிவிப்பே இல்லை! புட்டு புட்டு வைத்த சமூக செயற்பாட்டாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ஒரு அறிவிப்போ, நோட்டீசோ இல்லாமல் சென்னையில் சொத்து வரி கடுமையாக உயர்ந்துள்ளது. அனைவருக்கும் ஏற்றவில்லை.. ஆனால் ஆங்காங்கே ஏற்றியிருக்கிறார்கள்.. 300 சதவீதம் வரை சில இடங்களில் உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சமூக செயற்பாட்டாளர் சந்தியா கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர், சொத்து வரி கூடவில்லை என்று சொன்னார்.. அப்பெடியென்றால், தற்போது கூடியிருப்பதன் பெயர் என்ன? என்றும் சந்தியா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சமூக செயற்பாட்டாளர் சந்தியா கூறியதாவது:-

Property tax in Chennai shot up by 300 Percent without any announcement claims social activist

300 சதவீதம் வரை கூடியிருக்கு

சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் சொத்து வரி இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என உயர்த்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில், பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்தியாவும் சொத்து வரி 300 சதவீதம் உயர்ந்து இருப்பதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

சொத்து வரி ஏற்றியிருக்கிறார்கள். ரேண்டமாக ஏற்றியிருக்காங்க.. எல்லாருக்குமா என்றால் இல்லை.. ஆனால் நிறைய பேருக்கு சொத்து வரி ஏறியிருக்கிறது. 50 சதவீதம் உயர்ந்தது என ஒரு சிலர் சொன்னதையும் கேட்டேன்.. ஒருசிலர் 100 சதவீதம், 200 சதவீதம், 300 சதவீதம் சொத்து வரி உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு அறிவிப்பும் இல்லை

ஒரு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எந்த ஒரு நோட்டீசும் இல்லை. எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்றால், என்ன இது.. இப்படி திடீரென்று ஏற்றியிருக்காங்க.. எல்லாருக்கும் ஒரே போல் ஏற்றியிருந்தால் பரவாயில்லை. ஏன் இப்படி ஒரு சிலருக்கு மட்டும் ஏற்றியிருக்கிறாங்க என்று தான் சொல்கிறார்கள். ஒரே அப்பாட்மண்டில் வசிப்பவர்களில் சிலருக்கு 100 சதவீதம் ஏற்றியிருக்காங்க.. ஆனால் அதே அப்பாட்மண்டில் வசிக்கும் மத்தவங்களுக்கு எந்த விலையும் மாறவில்லை. இது என்னது?

எல்லாருமே குழம்பிப் போய் இருக்காங்க

போன மாதமே, ஜிசிசி பற்றி ஒரு டிஸ்கசன் வந்தபோதே நாங்கள் சொன்னோம், வரி வசூலை இன்னும் திறன் வாய்ந்ததாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னோம். முகப்பேரில் என் நண்பர் ஒருவருக்கு 16 ஆயிரம் வந்தது. ஆனால் இப்போது அவருக்கு ரூ.50 ஆயிரம் வந்து இருக்கு. இது வந்து உயர்வு இல்லை.ரிவைஸ்டு என கார்ப்பரேஷன்ல சொல்றாங்க.. ரிவைஸ்டு என போடுகிறார்கள்.

எதன் அடிப்படையில் ரிவைஸ்டு என சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. எல்லாருமே என்ன இது என்று அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். ரிவைஸ்டு என்றாலும் எல்லாருக்கும் ஒரே போல் என்றால் தெரியாது. ஒரு அறிவிப்பு இல்லை.. எப்படி எதன் அடிப்படையில் என ஒன்றுமே புரியாமல் எல்லாருமே ஒரு மாதிரி குழம்பிப்போய் தான் இருக்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+