சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆடு".. தமிழ்நாடு நிதி நிலையை விமர்சித்த அண்ணாமலை.. பிடிஆர் தந்த சரமாரி பதிலடி.. கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பொருளாதார நிலையை விமர்சனம் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டிற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

    தமிழ்நாட்டில் BJPக்கான காலம் வந்துவிட்டது - Annamalai நம்பிக்கை

    இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாஜக வழக்கறிஞர் தொடர்ந்த இந்த வழக்கில் 22ம் தேதி மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. இந்த நிலையில் இது பற்றி விவாதிக்க நேற்று முதல்நாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வடஇந்திய ஊடகங்கள் விவாதத்திற்கு அழைத்து இருந்தனர்.

    இதில் பிடிஆர் பேசிய விஷயங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தேசிய அளவில் அவரின் பேச்சை நிர்வாகிகள் ஷேர் செய்து வருகிறார்கள். முக்கியமாக வடஇந்தியர்கள் பலர் அந்த வீடியோவை பகிர்ந்து. வருகின்றனர்

    அவர் தனது பேச்சில், எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

    சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்! சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்!

    அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்த நிலையில் பிடிஆரை விமர்சனம் செய்த அண்ணாமலை, இந்தியாவின் பொருளாதாரத்தோடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பிடிஆர் ஒப்பிடுகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வேறு மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது அவருக்கு தெரியும் தமிழ்நாட்டின் மோசமான நிலைமை.

    ஜிடிபி

    ஜிடிபி

    தமிழ்நாட்டின் ஜிடிபி நிதி பற்றாக்குறை குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிராவை விட அதிகம். நம்முடையது 3.8 சதவிகிதமாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த கட்டுப்பாட்டு மதிப்பை விட இது மிக அதிகம். தமிழ்நாட்டில் நெஞ்சம் நிமிர்த்தும், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த, மூன்றாம் தலைமுறை அரசியல் வாரிசுக்கு இந்த பதிலை அளிக்கிறேன்.அவரின் பொருள் இல்லாத, தேவையற்ற ஆடம்பர பேச்சு நமது மாநில மக்களின் பணத்தை மேலும் மோசமாக்கும் என்று நினைக்கிறேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    நெட்டிசன் பதில்

    நெட்டிசன் பதில்

    இதற்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், திமுக அரசு 2011ல் ஆட்சியில் இருந்து செல்லும் போது நம்முடைய வருவாய் அதிகமாக இருந்தது. அதுவே உங்களின் கூட்டணியான அதிமுகவில் எடப்பாடி ஆட்சியை விட்டு போகும் போது தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 66 ஆயிரம் கோடியாக இருந்தது. சமுதாய முதலீடுகளும் உயரவில்லை. அண்ணாமலையால் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்க முடியவில்லை என்றால் அவர் அமைதியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பிடிஆர் பதில்

    பிடிஆர் பதில்

    இதை ஷேர் செய்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். அதில், இல்லை.. ப்ளீஸ்.. அவருக்கு இப்படி பதில் சொல்லாதீர்கள். பொருளாதாரம், பைனான்ஸ் ஆகியவற்றை ஒரு ஆடுடன் விவாதிப்பது என்பது ஒரு தெரு விளக்கு மரத்துடன் பிலாசபி பேசுவது போன்றது. இப்படி பிரபலத்திற்காக அலையும் தெரு விளக்கு மரங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister PTR Palanivel Thiagarajan replies to Annamalai on Tamil Nadu economy. தமிழ்நாடு பொருளாதார நிலையை விமர்சனம் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டிற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X