தனிப்படை அமைச்சி தேடுற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை சார்.. போலீஸிடம் அழுத மதன்
சென்னை: தனிப்படை அமைத்து தேடும் அளவுக்கு நான் வொர்த் இல்லை என போலீஸாரை பார்த்ததும் பப்ஜி மதன் அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
குறுகிய காலத்தில் எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி என்பதே இன்றைய ஒரு சில மக்களின் மனநிலையாகும். இதில் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இந்த மனநிலையுடன் காணப்படுகின்றனர்.
இதற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பங்களும் நமக்கு கைக் கொடுக்கின்றன. யூடியூப் சேனலை தொடங்கி அதில் நிறைய சந்தாதாரர்களை பிடித்துவிட்டு வீடியோக்களை அப்லோடு செய்தால் போதும் நோகாமல் நோன்பு கும்பிடும் அளவுக்கு பணம் கொழிக்கும்.

கிருத்திகா
அதைத்தான் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் கையில் எடுத்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பப்ஜி மதன், பப்ஜி விளையாட்டுக்கு சிறுவர்கள் அடிமையாகவுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த விளையாட்டை எப்படி சாதுர்யமாக விளையாடுவது என்பது குறித்து யூடியூப் சேனல்களை தொடங்கினார்.

குரல்களை மாற்றி
இதில் மதனும் கிருத்திகாவும் குரல்களை மாற்றி மாற்றி பேசியுள்ளனர். மேலும் வியூஸ் அதிகம் கிடைக்க சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதுகுறித்து புகார்கள் குவியத் தொடங்கின. இதையடுத்து போலீஸார் மதனை வலைவீசி தேடினர். இதனிடையே இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை போலீஸார் கைது செய்தனர்.

பப்ஜி மதன்
8 மாதக் குழந்தையை பிரிந்து தற்போது கிருத்திகா சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் போலீஸுக்கு போக்குக் காட்டிக் கொண்டும் உதார் விட்டுக் கொண்டும் இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

கெஞ்சி அழுத மதன்
போலீஸார் நெருங்குவதற்கு முன்னர் வீராவசனம் பேசிய மதன், போலீஸாரை பார்த்ததும் ஐயோ சார் என்னை விட்டுடுங்க, தனிப்படை அமைத்து தேடும் அளவுக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை சார் என கதறி காலில் விழுந்து கெஞ்சி அழுததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து போலீஸார் அவரை தருமபுரியிலிருந்து சென்னைக்கு இழுத்து வந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications