சென்னை மக்களின் கனிவான கவனத்திற்கு..இன்று மதியம் முதல் இரவு வரை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம்!
சென்னை: இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை சென்னை மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். இன்று காலை 10.35 மணியளவில் சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.
அதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு
இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே என அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இதனால் மெட்ரோ ரெயில்களில் இன்று மதியத்துக்கு மேல் கூட்டம் களைகட்ட உள்ளது.