துரத்தும் ‘ஜெயலலிதா’ மரணம்! எய்ம்ஸ் தந்தது அறிக்கை தானே! இறுதி தீர்ப்பு இல்லையே? விடாத புகழேந்தி..!
சென்னை : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்துள்ள அறிக்கை தானே தவிர இறுதித் தீர்ப்பு கிடையாது என ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா
அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட 7 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த மருத்துவக் குழுவானது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம்
பின்னர் அந்த ஆய்வின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த அறிக்கை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய நோய்களை சரியாக மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவகுழு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்துமே தேதிவாரியாக சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனை மீது இருந்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டதாகவும், இது ஜெயலலிதா மரண தொடர்பான விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

புகழேந்தி
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்துள்ள அறிக்கை தானே தவிர இறுதித் தீர்ப்பு கிடையாது என ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள புகழேந்தி,"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதி அரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணையை முடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் அறிக்கை விரைவில் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி தீர்ப்பு கிடையாது
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் சரியானதாகவும் முறையானதாகவும் இருந்தது என எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது அறிக்கை தானே தவிர இறுதி தீர்ப்பு கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் 150-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு இருக்கிறது.

நல்ல தீர்ப்பு வரும்
ஆணையத்தின் விசாரணைக்கு உதவுவதற்காகவே மருத்துவ நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டனர் எனவே முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சரியானதுதான் என்பதை ஆறுமுகசாமி ஆணையம் தான் கூற வேண்டும் அதுதான் இறுதியாக உறுதியான அறிக்கையாக இருக்கும் இந்த விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நான் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications