புரட்டாசி முடிஞ்சாச்சு.. அசைவ பிரியர்களுக்கு சேலத்தில் சர்ப்ரைஸ்! ஆனால் சென்னை காசிமேட்டில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறந்துவிட்டது.. அசைவப் பிரியர்கள் இறைச்சி, மீன் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். அந்தவகையில் சேலம் உட்பட தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மீன் மார்க்கெட்டுகள், கறி கடைகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை காசிமேட்டில் மழையும் தொடர் விடுமுறையும் சேர்ந்து வியாபாரத்தை மொத்தமாக பாதித்துவிட்டன.. !!!

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு காரணமாக பலரும் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். குறிப்பாக சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு பூஜை செய்வார்கள்... இதனால் இந்த மாதத்தில் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவது உண்டு.

Purattasi Month Kasimedu Fish Market Mutton Price

புரட்டாசி முடிஞ்சாச்சு

இந்த நிலையில், புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்ததும் சேலத்தில் இறைச்சி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது... நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் என்பதால், அஸ்தம்பட்டி, பழைய பஸ் நிலையம், சூரமங்கலம், குகை, அன்னதானப்பட்டி, அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800 முதல் ரூ.900 வரையும், நாட்டுக்கோழி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிராய்லர் கோழி கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனையானது.

மீன் வாங்க குவிந்த மக்கள்

சேலத்தில் இறைச்சி கடைகள் மட்டுமின்றி மீன் மார்க்கெட்டுகளிலும் விற்பனை மும்முரமாக நடந்தது. சூரமங்கலம் மீன் மார்க்கெட்டிலும், அஸ்தம்பட்டி, காந்தி ரோடு பகுதிகளில் உள்ள கடைகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். லோகு, கட்லா, மத்தி, ஊளி உள்ளிட்ட மீன் வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

காசிமேட்டில் மாறிய நிலைமை

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தைக்கு தினமும் சுமார் 150 முதல் 200 டன் மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்... விடுமுறை நாட்களில் மீன் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று விடிய விடிய பெய்த மழை இந்த எதிர்பார்ப்பை மாற்றிவிட்டது... தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், சில்லரை விற்பனைக்கான கூட்டமும் குறைவாக இருந்தது. போதாக்குறைக்கு மழையும் கொட்டி, மீன்கள் வரத்தும் குறைந்ததால் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

டைகர் இறால் ரூ.1,300

காசிமேட்டில் வஞ்சிரம், வெள்ளை வவ்வால் கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், கருப்பு வவ்வால் ரூ.800 முதல் ரூ.900 வரையும் விற்பனையானது. பாறை, சீலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.400 வரையும் விலை போனது. மத்தி, நெத்திலி ஆகியவை கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டன.

இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், டைகர் இறால் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையும் விற்பனையானது. நண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையும், வரி நண்டு ரூ.500 முதல் ரூ.600 வரையும் விலை போனது. கடல் விரால் ரூ.500 முதல் ரூ.600 வரையும், கடம்பா ரூ.300 முதல் ரூ.350 வரையும், தும்புளி ரூ.200 முதல் ரூ.250 வரையும் விற்பனையானது. கானாங்கெளுத்தி கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரையும், வாளை ரூ.150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை & சேலம்

அதுமட்டுமல்ல, ஒரு படகுக்கு 300 கூடை வரை கானாங்கெளுத்தி மீன்கள் பிடிபட்டிருந்தன. ஆனாலும், மற்ற மீன்களின் வரத்து குறைந்ததால் இந்த மீனின் விலைகளும் உயர்ந்தன... விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் வருகை குறைவாக இருந்ததால் சில்லரை விற்பனை மந்தமாகவே நடந்தது.

ஆக, புரட்டாசி முடிந்ததும் அசைவ விற்பனை சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு சேலத்தில் நிறைவேறியது. ஆனால், காசிமேட்டில் மழையும் தொடர் விடுமுறையும் சேர்ந்து மீன் வியாபாரத்தின் வேகத்தை குறைத்துவிட்டன...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+