சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வாழ வைத்த தெய்வங்கள்" வெறும் வசனம் தானா? சர்ச்சையான ஆளுநருடனான சந்திப்பு! ரஜினி பேசிய அரசியல் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசியதாகவும் ஆனால் அது குறித்து வெளியே சொல்ல முடியாது என கூறியுள்ள நிலையில், ரஜினிகாந்தின் பேச்சு முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழக மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ரசிகர்களை உசுப்பேற்றி நிலையில் திடீரென அரசியலுக்கு வர மாட்டேன் என என்றிக்கு எண்ட் கார்டு போட்டார்.

இதன் காரணமாக 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பொறுமை இழந்து தற்போது வேறு வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர் தற்போது ஜெயிலர் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் இன்று திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

ஆமா.. ஆளுநர் ரவியிடம் அரசியல் பேசினேன்! ஆனா, நான் அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி ஆமா.. ஆளுநர் ரவியிடம் அரசியல் பேசினேன்! ஆனா, நான் அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

 நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த இந்தச் சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்ற நிலையில் கார் மூலம் தனது இல்லம் அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டனுக்கு ரஜினிகாந்த் வந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைப் பார்த்து பேசுவதற்காக ஏராளமான செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் அவர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், ஆளுநர் ரவி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் காஷ்மீரை சேர்ந்த ஆளுநர் பல ஆண்டுகள் வடமாநிலங்களிலேயே இருந்ததாகவும் தற்போது தமிழகம் வந்துள்ள அவர் தமிழக மக்களை நேசிப்பதாகவும் தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை அவரை மிகவும் கவர்ந்துள்ளது எனவும் தமிழக நன்மைக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன் என பேசியதாக கூறினார்.

 அரசியல் பேச்சு

அரசியல் பேச்சு

அதே நேரத்தில் ஆளுநர் உடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது என கூறிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் என்ன இல்லை என திட்டவட்டமாக கூறினார் மேலும் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு நிலையில் அதற்கு பதில் அளிக்கவும் மறுத்த ரஜினி ஜெயலலிதா திரைப்பட படிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லது 25ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறினார்.

 தேவையற்ற குழப்பம்

தேவையற்ற குழப்பம்

இந்த நிலையில் ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும் அது குறித்து வெளியே சொல்ல முடியாது என ரஜினிகாந்த் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களை உசுப்பேற்றுவதற்காக ரஜினிகாந்த் இதே பாணியை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருவதாகவும், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவது ஏன்? பொதுமக்கள் நலனுக்காக குரல் கொடுக்க மாட்டாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கேள்விகளை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

வெறும் வசனம் தானா?

வெறும் வசனம் தானா?

தமிழக ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதாக கூறிய நிலையில் அது என்ன என்று தெரிவிக்க மறுத்து விட்டார் ஒவ்வொரு பேட்டி அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் 'என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே' என சொல்வது எல்லாம் வெறும் வசனம் தானா எனவும் நீட் தேர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை முடிவு எடுத்து நிலையில் ஆளுநர் உடனான பேச்சின் போது நீட் விளக்கு மசோதா கிடப்பில் உள்ளது அதைப் பற்றி பேசினீர்களா? எனவும் ஆளுநருடன் அரசியல் பேசிய ரஜினிகாந்த் ஜிஎஸ்டி குறித்து மட்டும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என சொன்னது ஏன் மக்கள் வாழ்வதாரம் தானே அரசியலுக்கு அடிப்படை என கேள்வி எழுந்துள்ளது.

முரண்பாடான பேச்சுக்கள்!

முரண்பாடான பேச்சுக்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இனிமேல் அரசியலுக்கே வரமாட்டேன் என அறிவித்த ரஜினிகாந்த் ஆளுநர் ரவியுடன் அரசியல் பேசியதாக கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு நிலையில் எதற்காக இந்த முரண்பாடான பேச்சுக்கள் எனவும் ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசி உள்ளதால் ரஜினிகாந்த் எந்த அரசியல் நிலைப்பாட்டில் உள்ளார்? வலதுசாரி இயக்கமா? இடதுசாரி இயக்கமா? அல்லது நடுநிலை அரசியல் இயக்கமா? என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும், ஆளுநரிடம் அரசியல் பேச ஏராளமான அரசியல்வாதிகள் இருக்கும் நிலையில் ஆளுநர் மீது ரஜினிகாந்த்க்கு நம்பிக்கை வர என்ன காரணம் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழக மக்களிடம் ஆளுநர் ரவியிடம் பேசிய அரசியல் குறித்த ரகசியங்களை வெளியிடலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
While actor Rajinikanth has said that during the meeting with Tamil Nadu Governor RN Ravi, he spoke about politics but could not speak out about it, Rajinikanth's speech has been criticized as a total reflection of contradictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X