அடுத்த 3 வாரம்.. ஹைஅலார்ட்.. கொரோனா பரவும் மதிப்பான 'ஆர் வேல்யூ' இந்தியாவில் மீண்டும் 1க்கு மேல்
சென்னை : இந்தியாவின் ஆர் எண் மதிப்பு மீண்டும் 1 க்கு மேல் 1.01% ஐ எட்டியுள்ளது. இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆர் எண் மதிப்பு விகிதம் 1 ஐ விட அதிகமாக இருந்தால், தொற்று மக்களிடையே பரவுகிறது என்று அர்த்தம் என்று கோவிட் டேட்டா அனாலிஸ்ட் விஜயானந்த் எச்சரித்துள்ளார்.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. அதேபோல் R factor என்று அழைக்கப்படக் கூடிய ஆர் எண், அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது, கொரோனா 3வது அலையை தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
ஆர் எண் மதிப்பு என்பது கொரோனா வைரஸை மதிப்பிடுவதற்கான ஒரு வழி அல்லது நோயை பரப்பும் திறனை குறிப்பது ஆகும். R என்பது பாதிக்கப்பட்ட நபர் ஒரு வைரஸை சராசரியாக பரப்பும் நபர்களின் எண்ணிக்கையை குறிப்பது ஆகும்.

கொரோனா பரவல் விகிதம்
புரியும்படி சொல்வது என்றால், உங்களுக்கு கொரோனா பரவி உள்ளது என்றால் உங்களிடம் இருந்து 10 முதல் 15 பேரிடம் பரவினால் ஆர் மதிப்பு 10 அல்லது 15 என்பதாக ஆர மதிப்பு இருக்கும் ஆனால் உங்கள் மூலம் வெறும் ஒருவருக்கே பரவியது என்றால் ஆர் மதிப்பு 1 ஆகும்.

மதிப்பு எவ்வளவு
அந்த காலத்தில் தட்டம்மை வேகமாக பரவியது. தடுப்பூசிக்கு பிறகு அது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தட்டம்மையின் R எண் 15 ஆகும். அதாவது, சராசரியாக, ஒருவர் 15 பேருக்கு தட்டம்மை நோய் ஒருவரிடம் இருந்து பரவி இருந்தது.. கொரோனா வைரஸின , R எண் மதிப்பு 3 என்ற அளவில் உள்ளது. இது பரவி உள்ள பகுதிக்கு தகுந்தாற் போல் மாறுபடுகிறது.

2வது அலை
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, நாட்டின் ஒட்டுமொத்த ஆர்-மதிப்பு மார்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை 1.37 என்ற அளவுக்கு அதிகரித்தது. இது ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 1.18 ஆகவும், பின்னர் ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் குறைந்து காணப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற தொடங்கியது
மே 9 மற்றும் 11 க்கு இடையில், ஆர்-மதிப்பு 0.98 ஆக இருந்தது. பின்னர் மே 14 முதல் மே 30 வரை 0.82 ஆக இருந்தது. ஆர்-மதிப்பு மே 15 முதல் ஜூன் 26 வரை 0.78 ஆகவும், ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை 0.88 ஆகவும் இருந்தது. கேரளாவில், ஆர்-மதிப்பு 1.10 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கடந்த மாதம் மதிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தியாவில் அதிகரிப்பு
ஆனால் தற்போது ஆர் மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பொதுவாக தொற்றுநோய் முடிவுக்கு வர R- மதிப்பு 1 க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில், ஆர்-மதிப்பு மே மாதத்தில் மிகக் குறைவாக இருந்தது, இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது, இதன் பொருள் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டதை காட்டுகிறது.

ஊரடங்கு தளர்வு
ஜூன் 16 இல் 0.78 ஆக குறைந்த நிலையில் ஆர்-மதிப்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அலட்சியம் காரணமாக மீண்டும் உயரத் தொடங்கியது. என்.டி.டி.வி பகுப்பாய்வின்படி, ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை ஆர்-மதிப்பு 0.78 முதல் 0.88 வரை உயர்ந்து இருந்தது இது ஜூலை 16 அன்று 0.95 என்ற புதிய உயர்வைத் தொட்டது.

உச்சத்தை நோக்கி கொரோனா
இந்நிலையில் இந்தியாவின் ஆர் எண் மதிப்பு மீண்டும் 1 க்கு மேல் 1.01% ஐ எட்டியுள்ளது. இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆர் எண் மதிப்பு விகிதம் 1 ஐ விட அதிகமாக இருந்தால், தொற்று மக்களிடையே பரவுகிறது என்று அர்த்தம் என்று கோவிட் டேட்டா அனாலிஸ்ட் விஜயானந்த் எச்சரித்துள்ளார். அதாவது கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது என்பதை குறிக்கிறது.

என்ன ஆகும் இனி
இந்தியாவின் கோவிட் கிராப் தொடர்ந்து உயர்ந்து இன்று 44,230 புதிய கேஸ்களை பதிவு செய்துள்ளது. இதனால் அடுத்த மூன்று வாரங்களில் மிக அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர் மதிப்பு உயர்வு 1க்குமேல் உள்ளதால் அப்படியே இனி நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்பதே இந்த அச்சத்திற்கு காரணம். முககவசம் அணியாமல் வெளியில் போக வேண்டாம். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள். தடுப்பூசி போடுங்கள். இந்த மூன்றும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் விளைவுகள் உண்மையிலேயே கடுமையாக இருக்கும்.
-
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications