கேரளாவில் 450 கிமீ நடைபயணம் நிறைவு! வியாழக்கிழமை நீலகிரி வருகிறார் ராகுல்! அணிதிரள தமிழக காங்அழைப்பு!
சென்னை: கேரளாவில் பாரத் ஜோடோ யாத்ராவை நாளையுடன் நிறைவு செய்யும் ராகுல்காந்தி, நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகை தருகிறார்.
வயநாட்டிலிருந்து கூடலூர் வரும் அவர், அங்கிருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லவிருக்கிறார்.
இதனிடையே ராகுல் காந்தியை கூடலூரில் வரவேற்று அவருடன் நடைபயணத்தில் கலந்துகொள்ள வருமாறு, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ராகுல் நடைபயணம்
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற முயற்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கேரளாவில் 450 கிமீ
தமிழகத்தில் தொடங்கிய நடைப் பயணம் 59 கி.மீ. கன்னியாகுமரி மாவட்டத்திலும், 19 நாளில் 450 கி.மீ.கேரள மாநிலத்தை கடந்து வருகிற 29 ஆம் தேதி தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு ராகுல் காந்தி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வருகிற 29 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார். ஏறத்தாழ 6 கி.மீ. பயணத்தை மேற்கொண்டு கூடலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்து அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

வெகு தொலைவில் இல்லை
கூடலூர் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும் அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும் நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. இதன்மூலம் கூடலூர் பகுதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ராகுல் காந்தி குரல் கொடுக்கிறார். அவரது குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்காமல் இருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

பா.ஜ.க.வின் கைப்பாவை
ராகுல் காந்தி அவர்களின் நடைப் பயணத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை அவர் பிரதிபலித்து வருவதை எவரும் தடுத்திட இயலாது. மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்கள் பா.ஜ.க.வின் கைப்பாவையாக ஆகிவிட்ட நிலையிலும் தலைவர் ராகுல் காந்தியின் குரலே மக்களின் குரல்.

கூடலூர் வரும் ராகுல்
ராகுல் காந்தி அவர்களின் கூடலூர் நடைப்பயணம் வெற்றி பெற நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கூடலூர் நடைப்பயணத்தின் ஏற்பாடுகளை, தமிழ்நாடு இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. அவர்களும், ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கணேஷும் வெற்றிகரமாக ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications