சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.1000 மழை நிவாரணம்.. அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.. மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் வழங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: மயிலாடுத்துறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை முதல் 1.61 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தற்போது சில நாட்கள் மழை குறைந்துள்ளது.

இருப்பினும் இந்த மாதம் துவக்கம் முதல் நவம்பர் 18 ம் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரை வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது.

ட்விஸ்ட்.. சென்னைக்கு அருகில் வந்த தாழ்வு பகுதி.. இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்! ட்விஸ்ட்.. சென்னைக்கு அருகில் வந்த தாழ்வு பகுதி.. இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

மயிலாடுதுறை மாவட்டம் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பாதிப்பு

குறிப்பாக சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழை அதிகமாக பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் சில நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மழை அதிகமாக பெய்தது. சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நிவாரணம் அறிவித்த முதல்வர்

நிவாரணம் அறிவித்த முதல்வர்

இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுத்துறை மாவட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். மேலும் மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.16.16 கோடி

ரூ.16.16 கோடி

இந்த அரசாணையில், ‛‛வடகிழக்கு பருவமழை 29.10.2022 அன்று தமிழகத்தில் தொடங்கியது. நவம்பர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு மழை பதிவானது. 10.11.2022 முதல் 11.11.2022 வரை 1198% அதிகப்படியான மழையைப் பதிவானது. கன மற்றும் மிக கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் 14.11.2022ல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பார்வையிட்டு ரூ.1000 நிவாரணம் அறிவித்தார். மாநில செயற்குழுவின் ஒப்புதலின்படி, அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், அவர்களின் உத்தரவில், அரசு ரூ. 16,16,47,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

ரூ.1.61 லட்சம் குடும்பம்

ரூ.1.61 லட்சம் குடும்பம்

அதன்படி மழை நிவாரணத்துக்காக ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழியில் 99,518, தரங்கம்பாடியில் 62,129 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 61,647 குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணத்தொகையை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நாளை முதல் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Government of Tamil Nadu has issued an order allocating Rs 16.16 crore to provide relief of Rs 1000 to the families affected by the rains and floods in Mayiladuthurai district. Accordingly, 1.61 lakh family card holders will be given relief of Rs.1000 from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X