சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடிக்கு கட்சி கவலை! ஆர்பி உதயகுமாருக்கு பதவி கவலை! ராஜேந்திர பாலாஜிக்கு என்ன கவலை தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : எதிர்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கைதாகி அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளி கொண்டாட முடியாமல் அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என சட்டசபை தலைவரிடம் கடிதம் கொடுத்தும் அலட்சியப்படுத்துவதாக சட்டசபையை புறக்கணித்தனர்.

மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆத்தி.. இது அதுல்ல! பார்த்ததும் “பதறிய” எடப்பாடி அண்ட் கோ - கைது செய்ய வந்த “பிங்க்” நிற இலவச பஸ் ஆத்தி.. இது அதுல்ல! பார்த்ததும் “பதறிய” எடப்பாடி அண்ட் கோ - கைது செய்ய வந்த “பிங்க்” நிற இலவச பஸ்

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்கு காவல்துறையினர் சார்பில் அனுமதி அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக-வினரை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்

3 வது அத்தியாயம்

3 வது அத்தியாயம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சியை நசுக்கி விடலாம் என்ற ஆளும் கட்சியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எடப்பாடியார் தான் அதிமுகவின் 3 வது அத்தியாயம். அதிமுகவின் வளர்ச்சியை முதல்வரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தீபாவளி

தீபாவளி

தீபாவளி கொண்டாட முடியாமல் அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடியார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் இதேபோல் போராட்டம் வெடிக்கும் எனப் பேசினார்.

English summary
Former minister Rajendra Balaji has said that Edappadi Palaniswami has been forcibly arrested after planning to threaten the AIADMK members for not being able to celebrate Diwali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X