அரசியலுக்கு முற்றுப்புள்ளி.. அடுத்தது என்ன? மீட்டிங்கில் ரசிகர்களை நெகிழ செய்த ரஜினியின் அறிவிப்பு?
சென்னை: அரசியலுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்ட ரஜினிகாந்த் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு மருத்துவம், கல்வி உதவிகளை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
இதையே அவர் நேற்று நடந்த மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்திலும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அரசியலுக்கு இன்று இல்லாவிட்டாலும் எப்போதாவது ரஜினிகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ரசிகர்களின் அந்த ஆசையும் நிராசையாக போனது.

மக்கள் மன்றம்
வருங்காலத்திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

ரஜினி அரசியல்
தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்துதான் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் கொரோனா கால சூழல் அவரை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது.

அறக்கட்டளை
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஏழை ரசிகர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை செய்யவுள்ளதாக அவரே நேற்றைய கூட்டத்தில் அறிவித்ததாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

உணவு, கல்வி
ஏழை எளிய மக்கள் இன்றைய தினம் ஒரு வேளை உணவுக்காகவும், கல்விக்காகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் போராடுகிறார்கள். மருத்துவ பரிசோதனை எடுக்கக் கூட சிலர் பணம் இல்லாமல் என்ன நோய் வந்திருக்கிறதே என தெரியாமல் சிகிச்சை எடுக்க முடியாமல் மரணிக்கிறார்கள்.

ஏழை
எனவே அந்த மருத்துவத்தை ஏழைகளுக்கு கொடுத்தால் ஒரு உயிரை காப்பாற்ற உதவும். அது போல் ஏற்கெனவே ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த நிலையில் கொரோனா வேறு வந்துவிட்டது. இதனால் கல்வி என்பதை கொடுத்துவிட்டால் ஏழைகள் தங்கள் வாழ்வில் உயர் நிலையை அடைய முடியும்.

ரஜினி முடிவு
இவற்றை மனதில் கொண்டு, தன் மீது வெறியர்களாக உள்ள ரசிகர்களுக்கு இந்த உதவிகளை செய்ய ரஜினி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ரசிகர்களுக்கு மட்டுமில்லை, மற்ற ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவிகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ரஜினி அறக்கட்டளையை தொடங்குகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications