ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்... அண்ணாத்த பார்க்க தியேட்டருக்கு வருவார் - ஒய். ஜி. மகேந்திரன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார். அண்ணாத்த பட ரிலீஸ் நாளில் ரசிகர்களை சந்திக்க வருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தைக்காண ஆவலோடு காத்திருக்கின்றனர். அண்ணாத்தே பாடல், பட ட்ரைலர் ஆகியவற்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தீபாவளியை ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட காத்திருக்கும் நிலையில் உடல் நல பாதிப்பால் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிக்கு சிகிச்சை
ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப்படும் முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டது.ரஜினிகாந்து இன்பார்க்சன் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

ஒய் ஜி மகேந்திரன் பேட்டி
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது என்றார்.

அண்ணாத்த ரிலீஸ்
ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறிய அவர், நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது. தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இருப்பார். உறவினர் என்ற முறையில் அவரை பார்த்து நலம் விசாரிக்க வந்ததாக கூறினார்.

விருது பெற்ற ரஜினி
டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சென்னைக்கு திரும்பிய நிலையில், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்ததாக ஹூட் செயலியில் பதிவிட்டிருந்தார்.

சுதாகர் ட்வீட்
ரஜினியின் உடல் நலம் பற்றி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டால் மட்டுமே ரசிகர்கள் நிம்மதியடைவார்கள்.












Click it and Unblock the Notifications