ரஜினிகாந்த் பேசும் நான் ராஜராஜ சோழன் வாரிசு.. வீர சைவன்.. சமூக வலைதளங்களை திணறடிக்கும் வீடியோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் பேசும் ராஜராஜ சோழன் வாரிசு...வீர சைவ என வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 60-வது பிறந்த நாள் விழா நிகழ்வில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி மாறன் பேசிய பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.

வெற்றி மாறன் பேச்சு
இயக்குநர் வெற்றி மாறன் பேசுகையில், நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.

வெற்றி மாறனுக்கு கண்டனம்
வெற்றி மாறனின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் சீமான், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வெற்றி மாறன் சொன்னதைப் போல இந்து என்ற சொல்லே அப்போது இல்லை; அது ஆங்கிலேயர் காலத்தில்தான் வந்தது என வாதிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போது களைகட்டும் விவாதங்கள் நடக்கின்றன.

திருமாவளவன் திடீர் கோரிக்கை
இதன் உச்சமாக, இந்து சமய அறநிலையத்துறை என்பதை நீக்க வேண்டும்; இந்து சமய அறநிலையத்துறை என்பதற்கு பதிலாக சைவ சமய அறநிலையத்துறை; வைணவ சமய அறநிலையத்துறை என பெயர் மாற்ற செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புதிய கோரிக்கை விடுத்துள்ளார். இதுவும் சலசலப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது.

வலம் வரும் ரஜினிகாந்த் வீடியோ
இந்த விவாதங்கள், சலசலப்புகளுக்கு நடுவே நடிகர் ரஜினிகாந்தின் வீடியோவும் இப்போது இணைந்துள்ளது. மன்னன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஒரு காட்சிதான் இப்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. காரணம் அதில், ராஜராஜ சோழன் வாரிசு.. நான் வீரசைவன் என ரஜினி பேசுவதுதான். மன்னன் திரைப்படத்தில் ரஜினியும் குஷ்புவும் பேருந்து இருக்கையில் அமர்ந்து வசனம் பேசுவர்.. அதில், ரஜினிகாந்த் நெற்றியில் திருநீறு பட்டை அணிந்திருந்தப்பதை சுட்டிக்காட்டி குஷ்பு இது எதுக்குங்க என கேள்வி கேட்பார்.. அதற்கு பதிலளிக்கும் ரஜினிகாந்த், நான் ராஜராஜ சோழன் வம்சம்...வீரசைவன் என பேசியிருப்பார். இப்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்களுக்கு பதிலடி என பகிர்ந்து வருகின்றனர் வெற்றி மாறன் கருத்தை ஆதரிப்போர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications